dinamalar telegram
Advertisement

'விரைவில் வருந்துவார்!'

Share

விரைவில் வருந்துவார்!'



'நல்ல மனிதர் தான்; அவரிடம் யாரோ தவறான தகவலை கூறி உசுப்பேற்றி விட்டுள்ளனர்...' என, கோவா முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மனோகர் பரீக்கரின் மகன் உத்பால் பற்றி கவலையுடன் கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.மனோகர் பரீக்கர் சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் காலமானார். கோவாவில் செல்வாக்கு மிக்க தலைவர். மோடி தலைமையிலான மத்திய அரசில் ராணுவ அமைச்சராக திறமையாக பணியாற்றியவர்.இவர் மத்திய அமைச்சரானதும் கோவாவில் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு குறைந்தது. இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பினார். அவரது திடீர்மரணத்தை பா.ஜ., தலைவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.அடுத்த மாதம் கோவாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது; பா.ஜ., தான் ஆளும் கட்சி. பிரமோத் சாவந்த் முதல்வராக உள்ளார்.
இந்த தேர்தலில், தன் தந்தை போட்டியிட்ட தொகுதியில், 'சீட்' கேட்டு பிடிவாதம் பிடித்தார், மனோகர் பரீக்கரின் மகன் உத்பால்; பா.ஜ., மேலிடமோ வேறு தொகுதியை ஒதுக்குவதாக கூறியது. இதை ஏற்க மறுத்த உத்பால், பா.ஜ., விலிருந்து விலகியதுடன், சுயேச்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். கோவாவில் உள்ள பா.ஜ., வினரோ, 'உத்பால் சமீப காலம் வரை கட்சியினரிடம் நல்ல உறவு வைத்திருந்தார். எதிர்க்கட்சியினர் தான், அவரை தவறாக வழி நடத்துகின்றனர். எதற்காக இப்படி செய்கிறார் என தெரியவில்லை. கேட்பார் பேச்சை கேட்டு, தவறான முடிவை எடுத்துள்ளார். இதற்காக விரைவில் அவர் வருந்துவார்'
என்கின்றனர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement