Load Image
dinamalar telegram
Advertisement

ரஜினி ரசிகர்களை வளைக்கும் பா.ஜ., நிர்வாகிகள்!

ரஜினி ரசிகர்களை வளைக்கும் பா.ஜ., நிர்வாகிகள்!''காலியிடங்களை பிடிக்க, பெண்கள் மத்தியில கடும் போட்டி நடக்குல்லா...'' என்றபடியே பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் சிட்டியில, சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் 14 இருக்கு... இங்க புதுசா 14 குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பணியிடங்களை அரசு உருவாக்கியிருக்கு வே...

''இது போக, நுண்ணறிவு, மதுவிலக்கு அமலாக்கம் உட்பட ஒன்பது இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியா கிடக்கு... மொத்தம் 23 இன்ஸ்பெக்டர் பணியிடங்களை பிடிக்க, ஆண்களை விட பெண் இன்ஸ்பெக்டர்கள் மத்தியில கடும் போட்டி நடக்கு வே...

''எஸ்.ஐ.,யா இருந்து சமீபத்துல புரமோஷன்ல வந்த ஏழு பெண்கள், மேற்கு மண்டலத்துல பிற மாவட்டங்கள்ல பணிபுரியும் 30 பெண் இன்ஸ்பெக்டர்கள், சேலம் சிட்டிக்கு வர விருப்ப மனு குடுத்திருக்காவ... ஆண்கள்ல, மூணு பேர் மட்டும் தான் மனு குடுத்திருக்காவ வே...

''அதே நேரம், குற்றப்பிரிவுல பெண்களை நியமிச்சா, வழக்கு விசாரணை, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு சரியா வராதுன்னு, ஏற்கனவே சேலம் சிட்டியில வேலை பார்த்து, வெளியிடங்களுக்கு போன ஆண் இன்ஸ்பெக்டர்களுக்கு காலியிடங்களை ஒதுக்க, அதிகாரிகள் முடிவு பண்ணியிருக்காவ வே...''
என்றார் அண்ணாச்சி.உடனே, ''ஆசிரியர்கள் பற்றாக்குறையால பள்ளிகள் திணறுது பா...'' என்றார் அன்வர்பாய்.

''எந்த ஊருல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்டத்துல, வட்டார அளவுல பள்ளிகள் பிரிக்கப்பட்டு, அப்பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்க, கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்காங்க... பல ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை பள்ளிகள்ல, மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லை பா...

''அதே நேரம், சில பள்ளிகள்ல தேவைக்கு அதிகமா ஆசிரியர்கள் இருக்காங்க... இப்படி இருக்கிறவங்களை, பற்றாக்குறை பள்ளிகளுக்கு இடம் மாற்ற, அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள்தான் பரிந்துரை செய்யணும் பா...

''ஆனா, அதிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்கிற அலுவலர்கள், மற்ற பள்ளிகளுக்கு, தங்கள் கட்டுப்பாட்டுல இருக்கிற ஆசிரியர்களை பரிந்துரைக்க மாட்டேங்கிறாங்க... இதனால, சில ஆசிரியர்கள் வேலையே செய்யாம சம்பளம் வாங்குறாங்க... சிலர், கூடுதல் வேலைப்பளுவுல சிக்கி திணறிட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''ரஜினி ரசிகர்களை சத்தமில்லாம வளைச்சிட்டு இருக்காங்க...'' என, கடைசி தகவலுக்கு வந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, கணிசமான இடங்களை பிடிக்கணும்னு, பா.ஜ., நிர்வாகிகள் நினைக்கிறாங்க... குறிப்பா, மாநகராட்சிகள்ல அதிக கவுன்சிலர் இடங்களை ஜெயிக்க திட்டமிட்டிருக்காங்க...

''இதுக்காக, தமிழகம் முழுக்க ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிற குடியிருப்பு நலச்சங்கத்தினர், இளைஞர் குழுக்கள் ஆதரவை திரட்டுறாங்க... இவங்களிடம், விளையாட்டு போட்டிகள்ல சாதிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்றதா சொல்லி ஆதரவு திரட்டுறாங்க...

''அதேபோல, ரஜினி ரசிகர்களையும் சந்திச்சு, ரஜினியின் ஆன்மிக ஈடுபாட்டை எடுத்துச் சொல்லி, அதே கொள்கையில இருக்கிற பா.ஜ.,வுக்கு ஆதரவு தரணும்னு கேட்டுட்டு இருக்காங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.வாசகர் கருத்து (2)

  • Prem -

    /////

  • John Miller - Hamilton,பெர்முடா

    கொக்கு தலையில் வெண்ணை வைத்து அதை பிடிப்பதை விட கேவலமான திடடம் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement