சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி: என்.எல்.சி., நிறுவனம், ஜம்புலிங்கம் முதலியார் முயற்சியாலும், நெய்வேலி மக்களின் தியாகத்தாலும் துவக்கப்பட்டு, வெற்றிகரமாக திகழ்கிறது. எனினும், அந்த மண்ணின் மைந்தர்கள் யாரும் இன்று அதில் பணிபுரியவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
'டவுட்' தனபாலு: இந்த அறிக்கை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அல்லது அந்த கட்சியிலிருந்து வெளியேறி, தமிழக வாழ்வுரிமை என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் வேல்முருகனுடையதோ என்ற, 'டவுட்' படிப்பவர்களுக்கு முதலில் வந்திருக்கும். அதன் பின் தான், உங்களின் அறிக்கை என்பதை அறிந்திருப்பர்... மேலும், நெய்வேலி விவகாரத்தை, 'டச்' செய்யும் அளவுக்கு, தமிழகத்தில் குழப்பங்கள் குறைந்து விட்டனவோ என்ற, 'டவுட்டும்' வந்திருக்கும்!
முதல்வர் ஸ்டாலின்: முதலில் எனக்கு, 'அய்யா துரை' என்று தான் பெயர் சூட்ட, என் குடும்பத்தினர் நினைத்திருந்தனர். அப்போது, ரஷ்யாவின் ஸ்டாலின் குறித்து, சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றிருந்தார். அவரிடம் ஒரு துண்டுச்சீட்டு கொடுக்கப்பட்டது. அதில், 'உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்' என எழுதப்பட்டிருந்தது. அந்த மேடையிலேயே, 'எனக்கு மகன் பிறந்திருக்கிறான்; அவனுக்கு, 'ஸ்டாலின்' என பெயர் வைக்கிறேன்' என அறிவித்தார் கருணாநிதி.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா மூன்றாவது அலை துவங்கியதிலிருந்து, முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான நடவடிக்கைகளால், இரவு ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு கடைப்பிடிக்கப்படுகிறது; தமிழக மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
'டவுட்' தனபாலு: இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள் ஊரடங்கு, வாரத்தின் மூன்று நாட்கள் கோவில்களில் வழிபட தடை என, ஏராளமான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை, மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளன. எனவே, கொரோனா பரவல் நடவடிக்கைக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனரா என்பது, 'டவுட்' தான். மேலும், இதில், முதல்வரின் சிறப்பான நடவடிக்கை எங்கு வந்ததோ என்பது தான் பெரும்பாலானோரின், 'டவுட்!'
'டவுட்' தனபாலு
வாசகர் கருத்து (3)
-
-
ஆக.. பிறக்கும் போதே துண்டு சீட்டா?
-
தமிழர்களின் மிகவும் மோசமான நேரம் பன்னீர், பழனி எல்லாம் தலைவர்கள் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருப்பது.
அந்த ஜோசப் ஸ்டாலின் இறந்தது மார்ச் 5, 1953. இந்த ஸ்டாலின் பிறந்தது மார்ச் 1, 1953. ஓ கருணாவுக்கு முக்காலமறிந்த ஞானி என்ற பெயர் வேறு உள்ளதோ? அதனால்தான் ஜோசேஹ் ஸ்டாலின் இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்னதாகவே தன்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தாரோ