dinamalar telegram
Advertisement

கதாயுதம் கை கொடுக்குமா?

Share

கதாயுதம் கை கொடுக்குமா?




'சிறுபான்மை ஓட்டு வங்கியை மட்டும் வைத்து காலத்தை கழிக்க முடியாது என அவருக்கு தெரிந்து விட்டது...' என, உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் துவங்கி ஏழு கட்டங்களாக இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னம் சைக்கிள். சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனம் என்பதால், இதை மட்டுமே பிரதானமாக வைத்து பிரசாரம் செய்வது, அகிலேஷ் யாதவின் வழக்கம். சிறுபான்மை மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக, பெரும்பான்மை மக்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சமாஜ்வாதியினர் நடந்து கொள்வர். ஆனால், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதை மையப்படுத்தி தற்போது, பா.ஜ., தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் ஹிந்துக்களின் ஓட்டு பா.ஜ., பக்கம் திரும்பி விடுமோ என்ற கவலை, அகிலேஷுக்கு
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம், தனக்கு கதாயுதத்தை பரிசாக கொடுக்கும்படி கட்சியினருக்கு கட்டளையிட்டுள்ளார், அகிலேஷ்.கதாயுதம், அனுமனின் ஆயுதம். அகிலேஷ் யாதவ், அனுமன் பக்தர். அதனால் பா.ஜ.,வின் பிரசாரத்தை முறியடிக்க கதாயுதத்தை கையில் துாக்கியுள்ளார்.'நல்லவர்களுக்கு மட்டுமே கதாயுதம் கை கொடுக்கும்; அக்கிரமத்துக்கு ஒருபோதும் துணை போகாது...' என, தத்துவம் பேசி, அகிலேஷை கிண்டலடிக்கின்றனர், பா.ஜ., வினர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement