'சந்திரசேகர ராவ் முதல்வராக இருப்பது, அவரது மகன், கே.டி.ராமாராவுக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது...' என கிண்டலடிக்கின்றனர், தெலுங்கானா மாநில மக்கள்.
இங்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், மாநில அமைச்சராக உள்ளார்; கட்சியும் அவரது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. சில மாதங்களுக்கு முன் நடந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், சந்திரசேகர ராவுக்கு, பா.ஜ., மரண பீதியை ஏற்படுத்தியது; எதிர்பார்த்ததை விட அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. இதனால் கடுப்பான சந்திரசேகர ராவ், பா.ஜ.,வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
இதைக் கேள்விப்பட்டதும், சமீபத்தில் தெலுங்கானாவுக்கு வந்திருந்த, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பதிலுக்கு, சந்திரசேகர ராவையும், அவரது மகனையும் மிக கடுமையாக தாக்கிப் பேசினார். தெலுங்கானாவில் வாரிசு ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டிய அவர், ஊழல் அதிகரித்து விட்டதாகவும் கூறினார்.
இதை தாங்க முடியாத ராமாராவ், 'பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் நடக்கும் ஊழல், விதிமீறல்கள் குறித்து பட்டியல் தயாரிக்கிறேன்; விரைவில் அதை வெளியிடுவேன்' என, தடாலடியாக அறிவித்தார்.
'தெலுங்கானாவில் நடக்கும் ஊழல்களை, சி.பி.ஐ., விசாரித்தால், சந்திரசேகர ராவின் ஆட்சியே கவிழ்ந்து விடும்; இது, அவரது மகன் ராமாராவுக்கு தெரியவில்லையே...' என்கின்றனர், அந்த மாநில மக்கள்.
ஆட்சி கவிழ்ந்து விடுமே!
வாசகர் கருத்து (1)
ஓஹோ இப்போ புரியூது சந்திரசேகர ராவ் எதற்கு அகிலேஷ் க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்று , சந்திரசேகர ராவ் அந்த ஒஸ்மானியா ப்ரொபஸர் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா இல்லை கருணா பாணியில் ?