'இதுக்கு பெயர் தான் விடியலா?'
கோவையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளின்படி அரசு செயல்படும். இனி, 'டாஸ்மாக்' தொடர்பாக யாரேனும் விஷமத்தனமாக பிரசாரம் செய்தால், நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் செய்யப்படும்...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'டாஸ்மாக் கடையில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பகல்கொள்ளையை தடுக்க, தமிழக அரசு நினைக்கவில்லை... மோசடி நடக்குதுன்னு சொன்னா, வழக்கு போடுவாங்களாம்... இதுக்கு பெயர் தான் விடியலா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!