dinamalar telegram
Advertisement

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே...!

Share

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே...!






'இருப்பதை விட்டு, பறப்பதற்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் புலம்ப வேண்டியிருக்கும்...' என, மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான இமர்தி தேவியை கிண்டலடிக்கின்றனர், காங்., கட்சியினர். ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வை விட சற்று அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் தான் இங்கு ஆட்சி அமைத்தது.காங்., மூத்த தலைவர் கமல்நாத் முதல்வராக பதவியேற்றார்; இமர்தி தேவி, கமல்நாத் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். ஜோதிராதித்யா சிந்தியா, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் காங்., கிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் ஐக்கியமானார்; சிந்தியாவுடன் சேர்ந்து, இமர்தி தேவியும் பா.ஜ.,வுக்கு தாவினார்.
இதனால் கமல்நாத் அரசு கவிழ்ந்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின் நடந்த இடைத்தேர்தல்களில் சிந்தியா ஆதரவாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்று, இப்போது அமைச்சர்களாகி விட்டனர். ஆனால், இமர்தி தேவி மட்டும் தோல்வி அடைந்தார்.
எம்.எல்.ஏ., பதவியும், அமைச்சர் பதவி பறிபோனதால் விரக்தியில் உள்ளார் இமர்தி. சமீபத்தில் அவருக்கு வாரிய தலைவர் பதவி தரப்பட்டது. 'என்ன இருந்தாலும் அமைச்சர் பதவிக்கு உள்ள செல்வாக்கே தனி தான்; அதெல்லாம் ஒரு இனிய காலம்...' என, பழைய நினைவுகளை அசைபோட்டபடி கண்ணீர் வடிக்கிறார், இமர்தி தேவி.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement