'அதை மறந்துட்டாரா?'
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், திருவாரூரில் துவங்கி திருச்சி, சேலம், ஓசூர் வழியாக மேகதாது வரை பேரணி நடந்து வருகிறது.சமீபத்தில் இக்குழு, நாமக்கல் வந்தது. அப்போது குழுவின் பொதுசெயலர் பாண்டியன், நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'மேகதாது காவிரி ஆற்றில் அணை கட்டும் பிரச்னையில், தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா காங்., செயல்படுகிறது. இதற்கு தமிழக காங்., ஆதரவாக உள்ளதால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அப்படின்னா, தி.மு.க., தமிழகத்தின் நலன் சார்ந்த கட்சியா... கச்சத்தீவு தாரை வார்த்தது முதல் காவிரி ஒப்பந்த குளறுபடி வரை அனைத்திலும், தி.மு.க.,வுக்கு பங்கு இருக்குது... அதை மறந்துட்டாரா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!