dinamalar telegram
Advertisement

கார்கே பேசியதற்கு என்ன அர்த்தம்?

Share

கார்கே பேசியதற்கு என்ன அர்த்தம்?



'குசும்பு பிடித்த ஆளாக இருப்பார் போலிருக்கிறதே...' என, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பற்றி கூறுகின்றனர், தி.மு.க., மற்றும் சிவசேனா கட்சியினர்.மல்லிகார்ஜுன கார்கே, மூத்த அரசியல்வாதி. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேசிய அரசியலில் நீண்ட காலமாக இருப்பதால் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் சரளமாக இவருக்கு பேசத் தெரியும். ஆனால், கர்நாடக மண்ணில் கால் பதித்ததும் கன்னட பிரியராக மாறி விடுவார். சமீபத்தில், பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் கார்கே. அப்போது கன்னடத்தில் பேசினார்.வட மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், 'சில நிமிடங்களாவது ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுங்களேன்...' என்றனர். இதற்கு அவர் ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம் அல்லது எதுவும் பேசாமல் எழுந்து சென்றிருக்கலாம். ஆனால் அதற்கு அவர் அளித்த பதில் தான், தற்போது மற்ற கட்சியினரை கடுப்பேற்றியுள்ளது.
'என்னிடம் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசும்படி வற்புறுத்துகிறீர்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், மஹாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயிடம் இப்படி உங்களால் கூற முடியுமா?' என, அதிர வைத்தார் கார்கே. தி.மு.க., மற்றும் சிவசேனா கட்சியினரோ, 'நம் தலைவர்களுக்கு தாய் மொழி மீது உள்ள பற்றுக்காக கார்கே இப்படி கூறினாரா அல்லது ஆங்கிலத்தில் பேசத் தெரியாது என்கிறாரா; எந்த அர்த்தத்தில் கூறினார் என தெரியவில்லையே...' என, குழப்பத்தில் உள்ளனர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Sundar கோவிந்தராஜ் - Pondy,இந்தியா

    Sema குத்து கூட்டணி கட்சியிடம் இருந்து

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அவர் உண்மையை தான் சொல்லியுள்ளார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement