'தமிழகம் தரம் தாழ்ந்து போயிருச்சு!'
கோவை செல்வபுரத்தில், பா.ஜ., சார்பில் நடந்த பொங்கல் விழாவில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'தனியார் 'டிவி'யில் ஒளிபரப்பான, 'ரியாலிட்டி' நிகழ்ச்சியில் குழந்தைகள் தெரிவித்த கருத்துகளை, 'கருத்து சுதந்திரம்' என எடுத்துக் கொள்ளக் கூடாது. அது, குழந்தைகளைப் பாதுகாக்கும், என்.சி.பி.சி.ஆர்., அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. அரசியல் கருத்துகளை குழந்தைகள் வாயிலாக திணிப்பதற்கு, அதில் அனுமதி இல்லை; அவர்களை அவ்வாறு பேசத் துாண்டியது கண்டனத்துக்குரியது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'எதுவும் தெரியாத பச்சபுள்ளைங்களை பேச வைச்சு, அரசியல் பண்ணுற அளவுக்கு, தமிழகம் தரம் தாழ்ந்து போயிருச்சு... இதை எல்லாம் ஆரம்பத்திலேயே கண்டிக்கணும்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!