வாய்க்கால் சண்டை!
'இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த பஞ்சாயத்து நீடிக்கும் என தெரியவில்லை...' என, கிண்டலடிக்கின்றனர், கர்நாடக மாநில மக்கள். இந்த மாநில காங்., தலைவர் சிவகுமாருக்கும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமிக்கும் நடக்கும் வாக்குவாதம் தான், மக்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியினரான சிவகுமாரும், குமாரசாமியும் பதவி பறிபோன விரக்தியில், அடிக்கடி முட்டி மோதுவது, மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள், 'விவசாயி வீட்டுப் பிள்ளை' என்ற கோஷத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் அளிப்பர். விவசாயிகளின் ஓட்டுகளை வாங்குவதற்காக இப்படி இவர்கள் பேசுவது வழக்கம்.
சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சிவகுமார்,'வேட்டி கட்டியவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல; அவர்களை பார்த்து ஏமாந்து விட வேண்டாம்...' என, மறைமுகமாக குமாரசாமியை தாக்கினார். இதைக் கேட்டு கடுப்பான குமாரசாமி, 'ஒரு சில சந்தர்ப்பவாதிகள், மக்களை ஏமாற்றுவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வேட்டி கட்டுகின்றனர்; அவர்களும் விவசாயிகள் அல்ல...' என, தன் பங்கிற்கு போட்டுத் தாக்கினார். 'எப்போது தான் இவர்களது வாய்க்கால் சண்டை முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இப்படி இருந்தால் எப்படி ஆட்சியை பிடிக்க முடியும்; பா.ஜ.,வுக்கு தாவ வேண்டியது தான்...' என்கின்றனர், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள்.
கொரோனா என்பதே இல்லை என்று மெக்கே தாட்டு கூட்டத்தை 250 கொடுத்து கூட்டினார்கள் இப்போ அந்த நிகழ்வுக்கு சென்றவர்கள் இடத்தில் கொரினா பீதி வந்துவிட்டது அதுவும் எங்களூரில்