dinamalar telegram
Advertisement

நினைப்பு பிழைப்பை கெடுக்கும்!

Share

நினைப்பு பிழைப்பை கெடுக்கும்!



'ரொம்பத் தான் கனவு காண்கிறார்; இன்னும் சில நாட்களானால், அமைச்சரவை பட்டியலையே அறிவித்து விடுவார் போலிருக்கிறதே...' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை கிண்டலடிக்கின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர். இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம் துவங்கி ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில், பா.ஜ.,விலிருந்து பல முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கு தாவி வருகின்றனர்.அதிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கட்சி தாவுவது, பா.ஜ., மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; முதல்வர் ஆதித்யநாத் கடும் குழப்பத்தில்
உள்ளார். இந்த திடீர் அரசியல் மாற்றம், முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அடுத்த முதல்வர் நான் தான்' என்ற முடிவுக்கு வந்து விட்டதை போல உள்ளன, அவரது நடவடிக்கைகள்.அயோத்தி தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த ஆதித்யநாத், அவரது சொந்த ஊரான கோரக்பூரில்போட்டியிடுவது, அகிலேஷின் சந்தோஷத்தை அதிகரித்துள்ளது.'எங்களைப் பார்த்து ஆதித்யநாத் பயந்து விட்டார். அதனால் தான் அயோத்தியை விட்டு, சொந்த ஊருக்கு ஓடி விட்டார். சமாஜ்வாதி ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது' என்கிறார், அகிலேஷ்.
பா.ஜ., வினரோ, 'நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும்...' என, கிண்டலடிக்கின்றனர்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement