dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

ராதாபுரம் தொகுதி 'மாஜி' அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., இன்ப துரை: நெல்லை மாவட்டம், கஸ்துாரிரங்காபுரத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பாலன் என்பவரை, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, போலீசார் கைது செய்துள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவாளரான பாலன் மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்.


டவுட் தனபாலு: கைதான சில நிமிடங்களிலேயே தன் ஆதரவாளர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் தந்து, பொதுமக்களை மறியல் செய்ய வைத்தார் என்ற செய்தி, பாலனைப் பற்றி வெளியானது. அவ்வளவு துாரம், செல்வாக்கு மிகுந்த மணல் கொள்ளையரை, அ.தி.மு.க., ஆட்சியில் எப்படி வெளியில் சுற்ற வைத்தீர்கள் என்ற 'டவுட்' எழுகிறதே... பதில் கிடைக்குமா?


உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி
: பொங்கல் பரிசுத் தொகுப்பில், புளி பாக்கெட்டில் பல்லி இருந்ததாக, திருத்தணியிலிருந்து ஒருவர் புகார் கூறி இருந்தார். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரணை செய்தபோது, பொய்யாக வேறு ஒரு புளி பாக்கெட்டைக் காண்பித்து அவதுாறு பரப்பி இருக்கிறார் என்பது தெரிய வந்தது.


டவுட் தனபாலு: கள தகவல்கள் வேறு மாதிரி வந்துச்சே... எந்த விவகாரமாக இருந்தாலும், அப்பாவி ஜனங்கள் பலிகடா ஆக்கப்படுறாங்கங்கறதுல, 'டவுட்'டே இல்லாம விளங்குறதுல, இந்த உதாரணம் தான் முன்னோடி!


பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசும், நீதிமன்றமும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அணை கட்ட வேண்டும் என காங்கிரசார் ஏன் போராடுகின்றனர்? அவர்கள் சட்டத்தை மீறுகின்றனர். கர்நாடகாவில் நடக்கும் பா.ஜ., அரசை, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குறை கூறி வந்தன. மேகதாது அணை விவகாரத்தில், இவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.


டவுட் தனபாலு: சந்தர்ப்பவாத அரசியல்ங்கிறது தான் புரிஞ்சு போச்சே... ஆனால், மத்தியிலும், மாநிலங்கள் அளவிலும் அத்துமீறும் காங்கிரசை இரும்புக் கரம் கொண்டு அடக்க, அரசைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.,வால் முடியவில்லையே... பலவீனமான அரசோ என்ற 'டவுட்' எழுகிறது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • rajan - erode,இந்தியா

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசும், நீதிமன்றமும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அணை கட்ட வேண்டும் என காங்கிரசார் ஏன் போராடுகின்றனர்? கர்நாடக முதல்வர் சொன்னதை மறைப்பானேன் எதிர்க்கட்சியினர் சொல்வதும் ஆளும்கட்சியினர் சொல்வதும் ஒன்றா

  • DHANDAPANI.R - avaniyapuram,இந்தியா

    ஆமா பொங்கல் புளி கண்ணகர்ர்னு இருக்கு அது புளி தான, தற்போது காங்கிரஸ் தலைவர் யார்யா, அவரோட நிரந்தர கொள்கை தான் என்ன, இவர்கள் கொள்கை சந்தர்ப்ப வாத கொள்கை, அந்த அந்த மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு மாற்றிக்கொண்டால் இவர்களை மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement