கட்டுமான பணியால் சாக்கடை அடைப்பு
திருப்பூர்:திருப்பூர், ஆலங்காடு நடராஜா தியேட்டர் ரோட்டில், ஸ்மார்ட் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோட்டின் ஓரத்தில் மழை நீர் வடிகால் கட்டுமானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இப்பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் அருகேயுள்ள பகுதிகளிலிருந்து சென்று சேரும் கழிவு நீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டு, கழிவு நீர் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.டைமண்ட் தியேட்டர் எதிர்புறம் உள்ள ரோடு வழியாக நடராஜா தியேட்டர் செல்லும் ரோட்டில் பூசாரி தோட்டம் பகுதியில், உள்ள கழிவு நீர் கால்வாய் கழிவு நீர் செல்ல வழியின்றி பல நாட்களாக தேங்கி நிற்கிறது.ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் அந்த ரோடும் சேதமடைந்துள்ளது. கனரக வாகனங்கள் சென்ற நிலையில், கால்வாய் மற்றும் ரோட்டில் தேங்கிய கழிவு நீர் அருகேயுள்ள நிலத்திலும், கட்டடங்களின் முன்பும் பாய்ந்து தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!