ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் மீது கொலைவெறி தாக்குதல்: துப்பு துலக்குவதில் போலீஸ் திணறல்
கம்பம் :ஆர் .எஸ் .எஸ் பொறுப்பாளர் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் விசாரணையில் தேக்க நிலை காணப்படுகிறது.கம்பத்தில் நேற்றுமுன்தினம் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட பொறுப்பாளர் ரவிக்குமார் 46, மீது கொலைவெறி தாக்குதல் நடந்தது. சம்பவம் குறித்து தேனி எஸ்.பி.,பிரவீன் உமேஷ் டோங்ரே நேரடி விசாரணை செய்தார். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் குமுளி ரோட்டில் சென்றுள்ளனர். குறிப்பிட்ட தூரத்திற்கு பின் டூவீலர்கள் எங்கு சென்றது என தெரியவில்லை. சிசிடிவி பதிவுகளில் துப்பு கிடைக்கவில்லை. தாக்குதலுக்குள்ளான ரவிக்குமார் எங்கிருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய இடத்திலிருந்து சம்பவம் நடந்த இடம் வரை அவரின் டூவீலர் வந்த பாதைகளில், அவருக்கு பின்னால் பிற வாகனங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.தனிப்படை தேனி ஏ.டி. எஸ்.பி சக்திவேல், அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் சிலைமணி உள்பட 4 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கின்றனர். சைபர் கிரைம் எஸ்.ஐ . பாக்கியலட்சுமி தலைமையில் குழுவினர் பாதித்தவரின் அலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்கின்றனர். சம்பவத்திற்கு முன் ஒரு வாரம் அவரது அலைபேசிக்கு வந்த அழைப்புகளும் ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் சம்பவத்திற்கு முன்னும்,சம்பவ இடத்தில் இருந்தவர்களின் அலைபேசி அழைப்புகளை கண்டறியும் பணி நடக்கிறது. சம்பவம் நடந்த பின் தமிழகத்திலிருந்து கேரளா சென்ற டூவீலர்கள் குறித்து சிசிடிவி பதிவுகளை குமுளிய கேரள சோதனை சாவடியில் தமிழக தனிப்படை போலீஸ் ஆய்வு செய்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!