dinamalar telegram
Advertisement

காளை போல சீறிய ஆளுங்கட்சி நிர்வாகி : வேலைக்கு 'ஆள்' வச்சு அள்ளும் அதிகாரிகள்

Share

சித்ராவின் வீட்டுக்கு வந்த மித்ரா, ''ேஹப்பி நியூ இயர் அக்கா,'' என்றவாறு, ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.

பதிலுக்கு வாழ்த்துக்கூறிய சித்ரா, இனிப்பும், மிக்சரும் எடுத்து வந்து டீபாய் மீது வைக்க,''இந்த வருஷம் புத்தாண்டு கொண்டாட்டம் பெரிசா இல்ல,'' என இனிப்பை சுவைத்தவாறே ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆமான்டி மித்து. ஒமைக்ரான் பரவல் அதிகமாயிடும் என்ற எச்சரிக்கையால், கட்டுப்பாடு விதித்துள்ளனர். அதனால், ரோட்ல யாரையும் காணோம். திரும்பவும் 'லாக்டவுன்' வந்துடும் போல...'' என கொரோனா 'டாபிக்' பேசினாள் சித்ரா.

இதிலுமா, பாரபட்சம்?''ஆமாங்க., தொற்று பரவுறதால வழிபாட்டு தலங்கள்ல, சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகளை கூட நிறுத்திட்டாங்க,'' என்ற மித்ரா, ''சில கோவில்கள்ல அன்னதானம் தர்றதுல ஏற்றத்தாழ்வு பாக்குறாங்கன்னு, வீரராகவ பெருமாள் கோவிலுக்கு போனப்ப, அங்க இருந்த பக்தர்கள் புலம்பியதை கேட்டேன்,'' என்றவள், தொடர்ந்தாள்.

''குறிப்பா, அவிநாசிக்கு பக்கத்திலுள்ள மாரியம்மன் கோவிலில், பரம்பரை அறங்காவலர், கோவில் அலுவலக பணியாளர்கள், அதிகாரிகளுக்கு மட்டும் ஸ்பெஷலா உணவு தயாரிக்கிறாங்களாம். சில கோவில் பணியாளர்கள், அதிகாரிங்க வீட்டுக்கே போய் உணவு கொடுத்துட்டும் வர்றாங்களாம்'' என்றாள் மித்ரா ஆதங்கத்துடன்.

''யெஸ் மித்து. நானும் கேள் விப்பட்டேன். அவிநாசிக்கு பக்கத்துல இருக்கற கருவலுாரில் இருக்கிற பிரென்ட் கூட இந்த விஷயத்தை பத்தி ஏற்கனவே, சொல்லியிருக்கா. சமத்துவம் போதிக்க வேண்டிய கோவில் அதிகாரிகளே இப்படி செய்யலாமா?'' என ஆவேசப்பட்டாள் சித்ரா.

ஆளுங்கட்சியில உள்குத்துகாபியை உறிஞ்சியபடியே, ''என்னதான் கொரோனா அச்சம் இருந்தாலும், கட்சிக்காரங்க எலக்ஷனை ஆர்வமா எதிர்பார்த்துட்டு தான் இருக்காங்க,'' என, அரசியல் ஆரம்பித்தாள் மித்ரா.

''ஆளுங்கட்சிக்காரங்க 'மக்கள் இயக்கம்'ங்கற பேர்ல, ஊர் ஊரா போய் மக்களை சந்திச்சு, மனு வாங்கறாங்க. அவங்க கூட்டணியில இருக்க தோழர்கள், அதுக்கும் ஒரு படி மேல போய், எந்த வார்டில தங்களாட கட்சி வேட்பாளரை நிறுத்த போறாங்களோ அந்த வார்டு பிரச்னையை மையப்படுத்தி, தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துறது, அதிகாரிகளுக்கு மனு கொடுக்குறதுன்னு, ஒரே அரசியல்தான்டி மித்து,'' என்றாள் சித்ரா.

''அதவிட ஆளுங்கட்சிக்குள்ள 'ஈகோ' பூந்து வெளையாடுதாம். சவுத் வி.ஐ.பி.,க்கு உதவியா, நாலைஞ்சு பேர் இருக்காங்க. இதுல ரெண்டு பேருக்குள்ள 'ஈகோ' அதிகமாகிடுச்சாம். ஒருத்தரை ஒருத்தர், காலை வாரி விடறதுல குறியா இருக்காங்களாம்,''

''அதுல ஒருத்தரு, மேயர் கனவுல வேற இருக்காராம். ரெண்டு பேத்துக்குள்ள நடக்கிற 'ஈகோ' பிரச்னைல, கட்சிக்குதான் கெட்ட பேருன்னு. எதுக்கு இப்படி 'நாக' பாம்பாட்டம் சீறிட்டு இருக்காங்கன்னு அவங்க கட்சிக்காரங்களே பேசிக்கறாங்க...'' என்றாள் மித்ரா.

ஏழாம் பொருத்தம்''மித்து, இதேபோல, மாவட்ட வி.ஐ.பி.,க்கும், காளைக்கு பேர் போன ஊரிலுள்ள ஒரு மாநில நிர்வாகிக்கும் ஏழாம் பொருத்தமாம். 'கட்சியில் இப்படி ஒரு அணி முழுமையாக அங்கீகரிக்கப்படவேயில்லை'ங்கற மாதிரி வி.ஐ.பி., தரப்பு பேசிட்டாங்களாம். இதனால், 'காங்கயம் காளை'யாட்டம் சீறி, கொதிச்சு போயிட்டாராம் அந்த நிர்வாகி.''

''அங்கே அப்படின்னா, காங்., கட்சியில வேற மாதிரி,'' என்ற சித்ரா, ''அந்த கட்சியோட மாநில தலைவர் பிறந்தநாள் சமீபத்துல வந்துச்சு. ஆனா, மாவட்ட நிர்வாகி, தன்னோட கோஷ்டி தலைவருக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்லி போஸ்டர் ஒட்டிட்டாரு,''

''இப்படியே கோஷ்டி கானம் பாடினால், கார்ப்ரேஷன் எலக்ஷன்ல என்ன பண்ணுவாங்கன்னுதெரியல,'' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.

கொள்கையில் 'தள்ளாட்டம்'''லாஸ்ட் டைம், 'டாஸ்மாக்'கில், வாரி குவிச்சு, ஏகபோகமா வாழ்க்கையை 'செட்டில்' ஆக்கிகிட்ட இலைக்காரங்க, இப்ப என்னடான்னா... இல்லீகல் 'பார்', சில்லிங்னு பல இடங்கள்ல நடக்குது, போலீஸ் கண்டுக்க மாட்டேங்றாங்கன்னு பேசறாங்க...'' என சிரித்தாள் சித்ரா.

''இதுதான் 2022ன் பெரிய காமெடிங்க்கா. 'பார்' விஷயத்துல, ரெண்டு கட்சியும் ஒரே கொள்கை, கோட்பாடுடன் தான் இருக்கிறாங்கறது, சின்னக்குழந்தைக்கூட தெரியுமே...''அதற்குள், செய்தித்தாளை புரட்டிய சித்ரா, ''மித்து, நாளைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க போகலாமா?'' என்றாள்.

''அக்கா, அது பத்தின ஒரு விஷயம் இருக்கு. சிவில் சப்ளை, கோ-ஆப்ரேட்டிவ் கடைங்க மூலமா, 21 வகை பொங்கல் பரிசு தொகுப்பு, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பிரிச்சு கொடுத்திருக்காங்க. அந்த சங்கங்கள்ல இருந்து ரேஷன் கடைகளுக்கு, பொருட்களை எடுத்து செல்லவும் நிதி ஒதுக்கியிருக்காங்க,''

''ஆனா, திருப்பூர்ல இருக்க சில கூட்டுறவு சங்கத்துக்காரங்க, ரேஷன் கடை விற்பனையாளர்களே வாடகைக்கு வண்டி வைச்சு, பொருட்களை எடுத்துட்டு போக சொல்றாங்களாம். இதனால கடைக்காரங்க 'அப்செட்'ல இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.

''அப்படின்னா, 'டிரான்ஸ்போர்ட்' செலவுக்காக கவர்மென்ட் தர்ற பணம், 'பாக்கெட்டு'க்குள போகுதா மித்து?

''மவுனம் சம்மதமா?''அப்படித்தான் இருக்கும் போல,'' என்ற மித்ரா, பல்லடத்துல, கத்தி அரிவாள் சகிதமா பெட்ரோல் பங்குல புகுந்த சிலரு, ஊழியர்களை தாக்கிட்டு ஓடினாங்க இல்ல. மிட்நைட்டில் நடந்த இதப்பத்தி, போலீஸ் வாயே திறக்க மாட்டேங்குதாம். தப்பியோடிய கும்பலை காப்பாத்த 'ட்ரை' பண்றாங்க போலன்னு, மக்கள் பேசிக்கிறாங்க,'' என, சந்தேகம் கிளப்பியவள் மீண்டும் தொடர்ந்தாள்.

''அக்கா, சவுத் ஸ்டேஷன்ல தன்னோட இருப்பை தக்க வைக்கிறதுல, ஒரு போலீஸ்காரர் ரொம்ப கவனமா இருக்காராம். பல வருஷமா, 'டேரா' போட்டிருக்க அவருக்கு, டிரான்ஸ்பர் போட்டாலும் 'டூயிங் டூயிட்டி' அப்படி, இப்படிங்கற பேர்ல, அங்கிருந்து நகர மாட்டேங்கறாராம்,'' என்றாள் மித்ரா.

'கைத்தடி'களால் தொல்லை''ஒருவேளை, அவரு 'ரகு' வம்சத்தில் இருந்து வந்தவரோ...'' என்ற சித்ரா, ''15 வேலம்பாளையத்துல கிராம அதிகாரிக்கு உதவியா ஒரு வாலிபர் இருக்காரு. ஆபீசர் சொல்ற இடத்துக்கு போறது, தேவையான டாக்குமென்ட்டை வாங்கிட்டு வர்றதுன்னு, சொல்ற வேலையை செய்துட்டு இருக்காரு...''

''ஆனா, ஏதாவது சான்று வேணும்னு கேட்டு, ஆபீசுக்கு வர்றவங்கிட்ட விவரம் தெரியாத மக்கள்கிட்ட பணம் வாங்கறாராம்.''போன வாரம், ஒருத்தர் கிட்ட இருந்து பணம் வாங்கிட்டு, வேலையை செய்து கொடுக்காததால, ஆபீஸ் முன்னாடி பெரிய பிரச்னையே நடந்துச்சு. அப்பவும் திருந்தலையாம். அந்த ஆபீசரும் கண்டுக்கறதில்லையாம்...'' என்றாள் சித்ரா.

''பல இடங்கள்ல இப்படித்தான், வாலிபர்களை எடுபிடி வேலைக்கு வைச்சிக்கிறாங்க. தண்டல்காரங்களுக்கு வயசாகிட்டதால, ஓடியாடி அவங்களால வேலை பார்க்க முடியலைன்னு ஒரு காரணத்தையும் சொல்றாங்களாம்,'' மித்ரா கூறினாள்.

தட்டிக்கழிக்கவா, பதவி?''போன வாரம், நீலகிரிஎம்.பி., ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை துவக்கி வச்சாரு. இதப்பதின செய்திக்குறிப்பில, பாரத பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்துல சாலை பணி, உணவு தானிய கிடங்கு, அங்கன்வாடி மையம்ன்னு இருந்தது,''

''இதனை கிளியர் பண்ண, சம்மந்தப்பட்ட துறையில் தொடர்பு கொண்டால், மினிஸ்டர் பங்ஷனில் இருக்கோம். ஏதாச்சும் சந்தேகம்னா பி.டி.ஓ.,கிட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லியிருக்காரு. சரின்னுஅவர்கிட்ட கேட்டப்போ, ரெண்டு வேலையும், நுாறு நாள் திட்டத்துல பண்ணியதுன்னு சொன்னாராம்...'' என்றாள் சித்ரா.
''மக்களுக்கு விளக்க வேண்டிய துறை ஆபீசர்களே இப்படி இருந்தா என்ன பண்றதுங்க்கா...'' என்ற மித்ரா, ''அக்கா, டைம் ஆயிடுச்சு. கெளம்பறேன்,'' என புறப்பட்டாள்.

Share
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement