Load Image
Advertisement

அகலக் கால் வைத்து அவதிப்படாதீர்கள்!

நிதி ஆலோசகர், என்.விஜயகுமார்: எப்பாடுபட்டாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் அல்லது வாங்கி விட வேண்டும் என்பது, பலரின் வாழ்நாள் விருப்பமாக இருக்கிறது. முதல் வீடு வாங்கப் போகிறவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வீட்டுக் கடன் பெறுவது துவங்கி, பத்திரப்பதிவு வரை பல்வேறு தவறுகளை செய்து, பின் அவதிப்படுகின்றனர்.ரொக்கப் பணம் கொடுத்து வீடு வாங்குவதாக இருந்தாலும், வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்கி மாத தவணை மூலம் கடனை அடைப்பதாக இருந்தாலும், 'பட்ஜெட்' மிக முக்கியம். பட்ஜெட்டை விட பெரிய வீடாக வாங்கும் பட்சத்தில் மாத தவணையை கட்டுவதில் சிக்கல் உருவாகும்.எந்த காரணம் கொண்டும் அகலக்கால் வைக்காதீர்கள். வீட்டுக்கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், வேறு எந்த கடனும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட கால சொத்துக்களை வாங்க, குறுகிய கால கடன்களை ஒருபோதும் வாங்காதீர்கள். வீட்டுக்கு எடுத்து வரும் தொகையில் பாதி அளவுக்கு தான், வீட்டுக்கடன் மாத தவணை இருக்க வேண்டும்.ஒருவரின் சம்பளம், சம்பாத்தியம், இதர வருமானம், வயது போன்றவற்றின் அடிப்படையில் வீட்டுக்கடன் கிடைக்கும். மேலும் சொத்தின் மதிப்பில் 80 சதவீதம் தான் கடன் கிடைக்கும். எனவே, இந்த இரு அம்சங்களையும் கணக்கில் எடுத்து, அதற்கு ஏற்ப விலை உள்ள வீட்டை தேடுவது நல்லது. இல்லை எனில், தேவையில்லாத அலைச்சல், நேர விரயம், பண விரயம் தான்.வீடு தேட ஆரம்பிக்கும் முன், நீங்கள் வீட்டுக் கடன் வாங்கப் போகும் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தை அணுகி, உங்களுக்கான கடன் தகுதியை அறிந்த பின், முன் ஒப்புதல் பெறுவதன் மூலம் வீடு தேடுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 'சிபி' அமைப்பு கொடுக்கும் உங்களுக்கான 'கிரெடிட் ஸ்கோர்' அடிப்படையில் தான், கடன் கிடைப்பது உறுதியாகும். பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் தான் வீட்டுக்கடன் சுலபமாக கிடைக்கும். மிகக் குறைவாக இருந்தால் கிடைக்காது.வீட்டுக்கான விலை தவிர, பத்திரப்பதிவு மற்றும் முத்திரைத் தாள் கட்டணம், பழைய வீடு அல்லது தரகர் மூலம் வீடு வாங்கினால் அவருக்கான கமிஷன், வீட்டுக்கடன் மற்றும் சொத்து காப்பீட்டுக்கான பிரீமியம் ஆகியவை உண்டு.வீட்டுக்கு குடி போன பின் சொத்து வரி, தண்ணீர் வரி, பெரிய வீடு எனில் அதிக மின் கட்டணம் என பல கூடுதல் செலவு கள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு, மாத தவணையை நிர்ணயம் செய்வது நல்லது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement