dinamalar telegram
Advertisement

இதே நாளில் அன்று

Share

டிச., 8, 1976



கோவையில், 1976 டிசம்பர் 8ம் தேதி பிறந்தவர், நிருபமா வைத்தியநாதன். தந்தையிடம், டென்னிஸ் பயிற்சி பெற்றார். தன் 9வது வயதிலேயே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். அன்றைய சூழலில் பெண்கள், டென்னிஸ் விளையாடததால், ஆண்களுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றார். 1992 முதல், டென்னிஸ் போட்டியில், ஐந்து முறை தேசிய அளவில் பட்டம் பெற்றார்.
கடந்த, 1995ல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் குழு, ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என, நான்கு பிரிவு டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள், இந்தியாவின் நம்பர் - ௧ டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தார். 'தி மூன் பாலர்' என்ற புத்தகம் எழுதியுள்ளார்.இந்திய டென்னிசில் உயரிய பட்டமான, 'நேஷனல் விமன்' பட்டத்தை, ஐந்து முறை வென்றார். தற்போது அமெரிக்காவில், 'நிருஸ் டென்னிஸ் அகாடமி' நடத்தி வருகிறார். டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் பிறந்த தினம் இன்று!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement