dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிக்கை: தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தி, மக்களுக்கு குறைந்த விலையில் தரமான தக்காளி மற்றும் காய்கறிகள் கிடைக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூட்டுறவு துறை நடத்தும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ 85 - 100 ரூபாய் விலையில், தினமும் 15 டன் மற்றும் இதர காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.


'டவுட்' தனபாலு: தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதை வைத்தே, தமிழக அரசு எவ்வளவு, 'சிறப்பாக' செயல்பட்டுள்ளது என்பதை, தமிழக மக்கள், 'டவுட்' இன்றி புரிந்திருப்பர். கிலோ 5 - 10 ரூபாய்க்கு சில நாட்களுக்கு முன் விற்ற தக்காளியை, 100 ரூபாய்க்கு விற்கிறோம் என கூற ஒரு அமைச்சர், அவருக்கு கீழே ஏராளமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது!


தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: இன்று முனைவர் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட்டம் பெறுபவர்களில் ஆண்களை விட, பெண்கள் தான் அதிகமாக உள்ளனர். இது, ஈ.வெ.ரா., கண்ட கனவு நிறைவேறி உள்ளதை காட்டுகிறது.


'டவுட்' தனபாலு: அமைச்சரின் பேச்சு, வரலாற்றையும், நம் தமிழக கலாசார பெருமையையும் மறைக்கும் விதமாக அமைந்திருப்பதில், 'டவுட்'டே இல்லை. ஏனெனில், சங்கக் காலத்திலேயே பெண்கள் பல விதங்களிலும் உயர்ந்திருந்தனர். கல்விக்காக பாடுபட்ட பல அறிஞர் பெருமக்கள் நம் சமுதாயத்தில் இருந்திருக்கின்றனர். அமைச்சர், ஈ.வெ.ரா., புகழ்பாட காரணம், வரலாற்றை திரிக்கும் திராவிட பழக்கமே!


மக்கள் நீதி மய்ய செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ்:
மருத்துவமனையில் இருந்த போதே கமல், தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். மருத்துவ அறிக்கையிலும், 'கமல் டிசம்பர் 4 முதல், அவரின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்' என தெளிவாக கூறியிருந்தது. 'பிக்பாஸ்' வீட்டுக்கு செல்லப் போவதையும், மருத்துவர்களிடம் கமல் கூறி இருந்தார். தனிமைப்படுத்த வேண்டும் என்றால், அப்போதே மருத்துவர்கள் தடுத்திருப்பர். இவ்விவகாரத்தில் மருத்துவ விதிகளை கமல் மீறவில்லை.


'டவுட்' தனபாலு: 'பிக்பாஸ்' போன்ற சமுதாயத்திற்கு
மிகவும், 'அவசியமான' நிகழ்ச்சிகளில் நடிகர் கமல் கலந்து கொள்ளவில்லை என்றால், நாட்டுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடாது. அவரின் அவசரத்தை பார்த்த பிறகு, அவரின் பணத்தாசை தமிழக மக்களுக்கு, 'டவுட்' இன்றி புரிந்திருக்கும்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Suppan - Mumbai,இந்தியா

    ராம் சாமி புருடாக்களை இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தத் திருட்டு திராவிடர்கள் உருட்டிக் கொண்டிருப்பார்கள்? யுனெஸ்கோ மன்ற "விருது" வைக்கம் "கயிறு", தமிழர் "தலைவர்" (தமிழ் தூக்கு போட்டுக் கொள்ளும்) இன்னும் எத்தனையோ

  • rajan - erode,இந்தியா

    சங்கக் காலத்திலேயே பெண்கள் பல விதங்களிலும் உயர்ந்திருந்தனர். கல்விக்காக பாடுபட்ட பல அறிஞர் பெருமக்கள் நம் சமுதாயத்தில் இருந்திருக்கின்றனர். ஆதாரத்துடன் தனபாலு தரவு வெளியிட தயாரா எத்தனை பெண்கள் எத்தனை ஆண்கள் என்ற விபரம் தர தயாரா சமுதாயத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விதம் எப்படி - அன்று இன்று எப்படி இதை திரித்து கூற வேண்டாம்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement