dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: ஜெயலலிதா நினைவிடத்திற்கு, முறையாக அனுமதி பெற்றே சென்றோம். ஆனால், நாங்கள் வெளியே வருவதற்குள், தினகரனின் அ.ம.மு.க.,வினரை போலீசார் உள்ளே விட்டனர். கலவரம் வர வேண்டும் என்பதற்காகவே, சிலர் இப்படி செய்கின்றனர். சசிகலா தொண்டர் படையுடன் வரவில்லை; குண்டர் படையுடன் வந்தார்.


'டவுட்' தனபாலு: கலகம் பிறந்தால் தான் நீதி பிறக்கும் என, தமிழக போலீசார் தவறாக நினைத்து இப்படி அனுமதித்து விட்டனரோ என்ற, 'டவுட்' வருகிறது. சசிகலா எப்போதும் அ.தி.மு.க., தொண்டர்களுடன் இருப்பது போல காண்பிப்பவர், குண்டர்களுடன் இருக்கிறாரோ என்ற, 'டவுட்'டும் கட்சியினருக்கு உங்கள் பேட்டியால் வந்திருக்கும்!


மார்க்சிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்
: தமிழக அரசுத்துறை பணியிடங்களுக்கும், மாநில பொதுத்துறை நிறுவன பணிகளுக்கும் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதுபோல, வேலைகளிலும் தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.


'டவுட்' தனபாலு: வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நிறுவிய மற்றும் வளர்த்த கட்சியின் தமிழக தலைவராக இருக்கும் உங்களுக்கு எப்படி இதுபோன்ற குறுகிய சிந்தனை வருகிறதோ என்ற, 'டவுட்' நிச்சயம் தமிழக மக்களுக்கு வந்திருக்கும். ஏனெனில், தமிழ் மற்றும் திராவிடம் என குரல் கொடுக்கத் தான் நிறைய கட்சிகள் இருக்கின்றனவே... நீங்கள் அவர்களுக்கு போட்டியா அல்லது பின்னணியா என்ற 'டவுட்'டும் மக்களுக்கு வரக்கூடும்!


தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி
: அடக்குமுறையை எதிர்க்கும் சக்தி, பா.ஜ.,வுக்கு மட்டும் தான் உண்டு. யாரும் பா.ஜ.,வை தவறாக மதிப்பிட வேண்டாம். முறைகேடு செய்வதை தி.மு.க., நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அதை எப்படி சந்திக்க வேண்டுமோ, அந்த வகையில் சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளது. பா.ஜ., பக்கம் தான் மக்கள் உள்ளனர்.


'டவுட்' தனபாலு: பா.ஜ., பக்கம் மக்கள் இருந்திருந்தால், மக்கள் செல்வாக்கு இருந்திருந்தால், தமிழகத்தில் நான்கு இடங்களுக்கு கூடுதலாக கிடைத்திருக்கும். பா.ஜ.,வுக்கு மத்தியில் செல்வாக்கு இருக்கிறது; கடந்த முறை, அ.தி.மு.க., அரசுடன் செல்வாக்கு இருந்தது. இப்போதும் அதே மிதப்பில், தி.மு.க.,வுடன் மோதத் தயாராகி விட்டதோ என்ற, 'டவுட்' வருகிறது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    குண்டர்கள் இல்லாத 'சாதுக்கள்' கட்சி உங்களது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement