dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

Share

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் நம் இலக்கு. அதை அடைய, நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து, தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக, பா.ம.க.,வை வலுப்படுத்துவோம்.
'டவுட்' தனபாலு: இதை விட உருக்கமாகவும், அதிகார தோரணையிலும் நீங்கள் பேசினாலும், தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியாக, பா.ம.க., உருவெடுப்பது, 'டவுட்' தான். ஏனெனில், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறுகிய கொள்கை, ஜாதிய கோட்பாடுகளை கொண்டுள்ள உங்கள் கட்சி, தமிழகத்தில் கரைசேருவது சிரமம் தான் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து!lll
நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மவுரியா: உயிரோடு இருக்கும் வரை அரசியலில் இருப்பார்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கும் என்பதை, கமல் ஏற்கனவே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சி தொடங்கிய போதே, 'வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றுவேன்' என, கமல் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். எந்த சூழலிலும் அரசியலை விட்டு விலக அவர் எண்ணியதே இல்லை.
'டவுட்' தனபாலு: தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தவிர்த்து, 10க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகள், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து, கூட்டணி சேர்ந்து, 'மக்கள் சேவை' ஆற்றி வருகின்றன. எனவே, ஆட்சிக்கு வரவே முடியாத கமல் கட்சி, எதற்காக அரசியலில் நீடிக்க வேண்டும்... விளம்பரத்திற்காகத் தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!lll
இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம்: ஏழை எளிய மக்கள், பெண்கள், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்கும் பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு செவிசாய்க்கா விட்டால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.
'டவுட்' தனபாலு: கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற போராட்டம் மற்றும் அடையாள வேலைநிறுத்தங்கள் என பல பெயர்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட முறை போராட்டம் நடத்தி இருப்பீர்கள். எனினும், உங்கள் கோரிக்கையும் தீரவில்லை; மத்திய அரசின் போக்கும் மாறவில்லை. எனவே, இந்த போராட்ட மிரட்டலாலும் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    'எப்பாடுபட்டாவது என் திருமகனை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிடுங்கள் தொண்டர்களே நாங்கள் ஒரு சிறுவிரலைக்க்கூட அசைக்காமல் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறோம் ' இவர்தான் 'நானோ, என் குடும்பத்தினரோ அரசியலில் பதவி வேண்டினால் நாற்சந்தியில் சவுக்கால் அடியுங்கள்' என்றவர் தொண்டர்களே நினைவு கொள்ளுங்கள்

  • KM Prabhu - SIVAKASI ,இந்தியா

    ""அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது"""....அப்படியா ?????

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் கால வரையறட்ட போராட்டம் நடத்தப் போவதாகவும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் C H வெங்கடாச்சலம் கூறி உள்ளார். இவர் 60 வயதிற்கு மேற்பட்டவர். ஓய்வு பெற்றவர். (65-70 வயது இருக்கும். இவர் ஏன் இன்னும் தொழிற்சங்க பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஜன நாயகம் என்று வாய் கிழிய பேசுகிறது. இவர் எத்தனை வருடமாக பதவியில் இருக்கிறார் என்று தெரியுமா? வங்கிகளில் இவருக்கு மாற்றாக தலைவர் ஆக வருவதற்கு தகுதி இல்லையா? இந்த கணினி யுகத்தில் தொழிற்சங்கத்திற்கு என்ன பிரயோஜனம் அனைத்து ஊழியர்களிடம் இருந்தும் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால், இவர் பெட்டி கட்டிக்கொண்டு வீடு செல்லவேண்டும். அரசு, ஓய்வு பெற்ற ஊழியர்கள் தலைமை பெற்ற சங்கத்துடன் எந்தவித negotiations உம் செய்ய முடியாது என்று ஒரு நிலை எடுத்தால் தான் இம்மாதிரி பெருச்சாளிகள் வெளியே செல்லமுடியும்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement