dinamalar telegram
Advertisement

50.கடிதப் போராட்டம்

Share

நேதாஜி திருமணம் செய்து கொண்ட விஷயம் ரகசியமாகவே இருந்தது. 1943ஆம் ஆண்டுதான் வெளி உலகிற்கு அந்த திருமணம் குறித்த செய்தி தெரியவந்தது.

இந்தியா விடுதலை அடையும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார் நேதாஜி. ஆனால் அந்த சபதத்தை முடித்துக் கொள்ளும் விதமாக எமிலியின் காதல் அவரைக் கவர்ந்து இருந்தது.

1943 ஆம் ஆண்டு நேதாஜி தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் நான் போய்க் கொண்டிருப்பது ஆபத்து நிறைந்த பாதை என்பது எனக்கு தெரியும். நான் மீண்டும் வர முடியாமல் போனால் எனது இறுதிக் கடிதம் இதுதான். நான் இங்கே ஒரு ஆஸ்திரிய பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அனிதா போஸ் என்ற குழந்தை பிறந்திருக்கிறாள். ஒருவேளை நான் இல்லாமல் போய்விட்டால் எனது மனைவியையும் மகளையும் என்னைப் போல பார்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார்..

எழுத்துருவாக்கம்:
ஆதலையூர் சூரியகுமார்,
மாநில செயலாளர்,
தேசிய சிந்தனைக் கழகம்,
கும்பகோணம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement