Load Image
Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலின்: கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான, அணை பாதுகாப்பு மசோதாவை, மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. அணைகள் மாநிலத்திற்கு சொந்தமானவை. எனவே, அதன் பாதுகாப்பும் எங்களுடையது. ஆனால், இந்த மசோதா அரசியல் சாசனத்தின் விதியை மீறுவதாக உள்ளது. இது மத்திய,- மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் சறுக்கலாக அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.


'டவுட்' தனபாலு: மேட்டூர் அணையில் ஒரு பிரச்னை என்றால், மத்திய அரசை தான் நாடுகிறோம். முல்லை பெரியாறில் கேரளா பிரச்னை செய்கிறது எனும் போது, சுப்ரீம் கோர்ட் தான் செல்கிறோம். மத்திய அரசின் கருத்துபடி தான், சுப்ரீம் கோர்ட்டும் முடிவெடுக்கிறது. எனவே, அணைகளை தேசிய சொத்தாக கருதி, மத்திய அரசு வசம் விட்டால் தான் பிரச்னைகள் தீரும் என்பதில், 'டவுட்டே' இல்லை!


பிரதமர் நரேந்திர மோடி
: பணப் பரிமாற்றம் பல மாற்றங்களை கண்டு வருகிறது. பண்டமாற்று முறையிலிருந்து நாணயம்; நாணயத்திலிருந்து ரூபாய் நோட்டுகள்; காசோலையிலிருந்து அட்டைகள் என பரிமாற்றம் கண்டு, இப்போது டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு வந்துள்ளோம். ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதை விட, மொபைல் போன் வழியாக பணம் அனுப்புவுது, கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது.


'டவுட்' தனபாலு: மாத சம்பளத்தை பேப்பர் கவரில் காசாளரிடம் இருந்து பெற்ற திருப்தி இப்போது இல்லை என்கின்றனர் பலர். எனினும், திருட்டு பயமில்லாதது, விரைந்து கிடைத்தல், பாதுகாப்பாக உணர்தல் போன்றவற்றால், 'டிஜிட்டல்' பண பரிவர்த்தனை வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும்; ஏராளமானோர் பின்பற்றுவர். இந்த முன்னேற்றத்திற்கு உங்கள் அரசு ஒரு காரணம் என்பதில், 'டவுட்' இல்லை!


பத்திரிகை செய்தி:
கடந்த ஜூலையில் இருந்து, டாஸ்மாக் கடைகள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை திறக்கப்படுகின்றன. இந்நிலையில், 'மதுக் கடைகளும், அவற்றை ஒட்டி செயல்படும் 'பார்'களும், மதியம் 12:00 முதல் இரவு 10:00 மணி வரை செயல்படும்; இது, உடனடியாக நடைமுறைக்கு வருகிறது' என, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


'டவுட்' தனபாலு: மதுக்கடைகள் காலை 10:00 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், இனிமேல் 12:00 மணிக்கு மேல் திறக்கப்பட்டால், மதுபான பிரியர்களுக்கு சோகமே ஏற்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை. காலையிலேயே குடித்து பழகியுள்ள நம்மவர்கள் 12:00 மணி வரை 'தண்ணி'யடிக்காமல் தத்தளிப்பரே... என்ன செய்யப் போகின்றனரோ என்ற, 'டவுட்' வருகிறது!தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:
கொரோனா பொது முடக்கக் காலங்களில் பிரதமர் மோடியின் நெருங்கிய பெரும் தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 53 ஆயிரம் உயிர்களைப் பலி கொடுத்து, சில தொழிலதிபர்களை வாழ வைக்கும் அரசை என்ன சொல்லி அழைப்பது?


'டவுட்' தனபாலு: பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் என நினைத்து விட்டீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது. அப்பழுக்கில்லாத, சுத்தமான கைகளுக்கு சொந்தக்காரர் அவர். வாரிசு அரசியலுக்கு வழிகோலிய காங்கிரஸ் தலைவர்கள், மோடி பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. கோடீஸ்வர தொழிலதிபர்களை வாழ வைத்தார் மோடி என்பது அரசியல் குற்றச்சாட்டு என்பதில், 'டவுட்டே' இல்லை!


தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி:
அணைகளின் பாதுகாப்பு குறித்து எந்த விதமான சட்ட விதிமுறைகளும் இல்லாத நிலையில், பல்வேறு முயற்சிகளுக்கு பின் பொதுநலன் கருதி, அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர், மாநில பட்டியலில் இருப்பதால், இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கிறது என்று கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது.


'டவுட்' தனபாலு: மாநிலங்கள் நிர்வகிக்கும் விவகாரங்கள் பட்டியலில் இருக்கும் தண்ணீர் விஷயத்தில், மத்திய அரசு தலையிடக் கூடாது என மாநில அரசுகள் சில கூறுவது, 'டவுட்'டே இல்லாத, பத்தாம்பசலித்தனம். ஏனெனில், மழை பெய்து அதிக தண்ணீர் வந்தாலும், மழை பெய்யாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், மத்திய அரசிடம் தானே மாநில அரசுகள் நிதி கேட்கின்றன. எனவே, அணைகள் பாதுகாப்புக்கான சட்டம் அவசியமான ஒன்று. அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்
: சென்னையில், 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது குப்பை அகற்றிய அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும், சென்னை மாநகராட்சி சார்பில், 2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதுபோல, இந்த முறையும் சிறப்பாக பணியாற்றியுள்ள துாய்மை பணியாளர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.'டவுட்' தனபாலு: துாய்மை பணியாளர்கள், சுகாதார முன்கள பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். நகரங்களில் சுத்தம், சுகாதாரத்தை பராமரிக்கும் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. அது சரி, அதென்ன, 5,000 ரூபாய்? ஆளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கேட்டால் குறைந்து போய் விடுவீர்களோ... 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க!வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மதுக் கடைகளும், அவற்றை ஒட்டி செயல்படும் 'பார்'களும், அதிகாலையிலேயே ஆவின் பங்க் போலவே திறந்துவிடவேண்டும்.. இல்லாடா 24 hours. மூடவே வேண்டாம்..

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சாமானியனின் அன்றாடத் தேவையான பெட்ரோல், டீசல், சமையல் வாயு எல்லாவற்றையும் தனியாரிடம் விட்டு, அவர்கள் இஷ்டத்துக்கு விலையேற்றுவதும், பெரும் தொழிலதிபர்களுக்கு வரிச்சலுகை அளிப்பதும் மக்களின் வயிற்றிலடிப்பது இல்லையோ ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement