dinamalar telegram
Advertisement

48. தந்தையின் மரணம்

Share

இதற்கிடையில் நேதாஜியின் தந்தை உடல்நலம் கவலைக்கிடமாக இருந்தது. தன் தந்தையை பார்ப்பதற்காக இந்தியா திரும்புவதற்கு ஆங்கில அரசிடம் அனுமதி வேண்டினார். நேதாஜி அதற்காக ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதினார். (தாய் நாட்டுக்கு வர அந்நிய நாட்டவர் இடம் அனுமதி கேட்க வேண்டிய அவல நிலையைப் பார்த்தீர்களா? )

ஆங்கில அரசு முதலில் அனுமதி தரவில்லை. ஆனால் பின்னர் நிபந்தனை விதித்தது. இந்தியா வந்து தந்தையை பார்த்தவுடன் அவர் திரும்பி விட வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. ஆங்கில அரசு விதித்த நிபந்தனையை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நேதாஜி இருந்தார். விமானம் மூலமாக கோல்கட்டாவிற்கு வந்து சேர்ந்தார். ஆனால் யாரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பல மைல்கள் தாண்டி வந்தாரோ அவரை பார்க்க முடியவில்லை. நேதாஜியின் தந்தை இறந்து போயிருந்தார். தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக உடனே ஆஸ்திரியா திரும்பினார் நேதாஜி. ஆங்கில அரசுக்கு நிம்மதி பிறந்தது.

(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement