காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தியது சரியான செயல் அல்ல என்று நேதாஜியும் விட்டல்பாய் பட்டேலும் சொன்னார்கள். ஆயுதம் ஏந்தினால் தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று திட்டவட்டமாக நம்பினார் நேதாஜி.
காந்தியின் கொள்கைகள் தோல்வி அடைந்து விட்டன. காங்கிரஸ் கட்சிக்கு வேறு ஒரு வலிமையான தலைவரே தேட வேண்டும் என்று சொன்னார் நேதாஜி. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறவேண்டுமானால் வெளி நாடுகளின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்ற நோக்கம் இருவருக்கும் இருந்தது.
இந்திய விடுதலைக்காக விட்டால்பாய் பட்டேல் வெளிநாடுகளில் நிதி திரட்ட தொடங்கினார். அவர் மரணம் அடைவதற்கு முன்பாக சேர்த்து வைத்திருந்த அத்தனை நிதியையும் நேதாஜியிடம் கொடுத்து இந்திய விடுதலை பற்றிய தனது திட்டங்களை அவரிடம் தெரிவித்தார்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!