Load Image
dinamalar telegram
Advertisement

கோடநாடு வழக்கு தகவல்களை 'பாஸ்' பண்ணும் அதிகாரி!

கோடநாடு வழக்கு தகவல்களை 'பாஸ்' பண்ணும் அதிகாரி!''நகராட்சி சேர்மன் பதவிக்கு ரெண்டு 'மாஜி'க்கள் முண்டா கட்டுறாங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.


''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சியில 33 வார்டுகள் இருக்குது... சீக்கிரமே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கப் போறதால, தி.மு.க., - அ.தி.மு.க.,வுல விருப்ப மனுக்கள் வாங்கிட்டு இருக்காங்க பா...

''தி.மு.க.,வுல, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, 26 மற்றும் 31வது வார்டுகளுக்கு விருப்ப மனு குடுத்திருக்கார்... இதுக்காகவே, கெங்கவல்லி தொகுதியில இருந்த தன் ஓட்டை, ஆத்துார் 31வது வார்டுக்கு மாத்தியிருக்காரு பா...

''அ.தி.மு.க.,வுல முன்னாள் எம்.எல்.ஏ., சின்னத்தம்பியும் விருப்ப மனு குடுத்திருக்கார்... இவரும் தன் ஓட்டை, ஆத்துார் நகராட்சி 26வது வார்டுக்கு மாத்திட்டாரு பா...

''அங்கேயே வீடும் கட்டிட்டு இருக்கிறதால, சீக்கிரமே குடியேறவும் முடிவு செஞ்சிருக்கார்... ரெண்டு பேருமே கவுன்சிலர் தேர்தல்ல ஜெயிச்சு, சேர்மன் பதவியை பிடிச்சாகணும்னு பிளான் போடுறாங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.

''சிவகங்கை மாவட்டத்துல இருக்கிற டாஸ்மாக் கடைகள் சார்புல, மாவட்ட மேலாளர், துணை மேலாளர்களுக்கு மாசம் 10 ஆயிரம் ரூபாய் தரணும்னு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''மேல சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''மாவட்ட அலுவலக ஊழியர் ஒருத்தர், ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட தேதியில வந்து, 10 ஆயிரத்தை வசூல் பண்ணிட்டு போறாரு... எந்த கடையிலாவது பணம் தர மறுத்தா, மாவட்ட மேலாளர் மற்றும் துணை மேலாளர் அங்கே ரெய்டு நடத்தி, விற்பனையாளர்களை சஸ்பெண்ட் அல்லது டிரான்ஸ்பர் பண்ணிடுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''மாசம் 10 லட்சம் வரை மாமூல் கொட்டறது ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''எந்த ஊர் போலீசுக்கு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.


''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பரபரப்பா போயிண்டு இருக்கோல்லியோ... இதுல, தனிப்படை போலீசாரின் அடுத்தகட்ட விசாரணை நகர்வுகளை, நீலகிரி எஸ்.பி., அலுவலகத்துல இருக்கற ஒரு பெண் அதிகாரி, எதிர் முகாமான அ.தி.மு.க., தரப்புக்கு கச்சிதமா 'பாஸ்' பண்ணிண்டு இருக்காங்க ஓய்...

''அ.தி.மு.க., ஆட்சியில, கோவை முக்கிய புள்ளிக்கு நெருக்கமா இருந்தவங்க, ஆட்சி மாறியதும் பக்கத்துல இருக்கற கோவைக்கு மாற்றப்பட்டாங்க... ஆனா, சில நாட்கள்லயே மறுபடியும் நீலகிரிக்கு, அதுவும் பழைய போஸ்டிங்கையே வாங்கிட்டு போயிட்டாங்க ஓய்...

''எஸ்.பி.,யை விட இவங்களுக்கு தான் 'பவர்' அதிகம்... நீலகிரியில இருக்கற ரிசார்ட்கள், மரக் கடத்தல் புள்ளிகளிடம் இருந்து மாசம் 10 லட்சம் வரைக்கும், இவங்களுக்கு மாமூல் வசூலாகறது ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

''என் வீட்டம்மாவின் பிரண்டு சுபாஷிணி வீட்டுல விசேஷம்... நான் கிளம்புதேன்...'' என்றபடி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • சிவா - Aruvankadu,இந்தியா

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீலகிரி அழிவை சந்திக்கும். கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்படும்.. வெயில் காலத்தில் ஊட்டி வந்தவர்கள். வேறு இடம் தேடி போகும் சூழல் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் பணம் படைத்த கடவுள்கள் கான்கிரீட் காட்டில் வாழ்வார்கள் உள்ளூர் கிராமவாசிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ பழக வேண்டி வரும். பணம் படைத்த கடவுள்கள் போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்து பூச்செடிகள் வளர்ப்பார்கள். காய்கறிகள் வளர்க்க தண்ணீர் இருக்காது. பிழைப்பு தேடி திருப்பூர் கோவை செல்வார்கள். சரி எப்படியும் போகட்டும். காட்டில் உள்ள மிருகங்கள் எங்கு போகும்....

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement