'கெஞ்சுற மாதிரி இருக்கே!'
கரூரில், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், 'கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தி.மு.க.,வுக்கு இழுத்துச் செல்கின்றனர். அ.தி.மு.க.,வில் உள்ளோரை இழுத்து தான், தி.மு.க.,வை நடத்த வேண்டிய நிலை உள்ளது. 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் நாங்கள் நினைத்து இருந்தால், தி.மு.க.,வில் யாரும் இருந்திருக்க முடியாது. நாங்கள் மனசாட்சிப்படி நடந்து கொண்டோம்...' என்றார்.
அங்கிருந்த மூத்த தொண்டர் ஒருவர், 'நாங்க மனசாட்சிப்படி நடந்து கொண்டோம்... தயவு செய்து, அ.தி.மு.க.,வில் இருந்து யாரையும் இழுக்காதீங்கன்னு கெஞ்சுற மாதிரி இருக்கே...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.
கட்சி மாறினால் ஊழல் வழக்கிலிருந்து தப்புவதுடன், அமைச்சர் பதவிகூடக் கிடைக்கலாம் என்ற முன்மாதிரியைப் பார்த்தவர்களுக்கு சபலம் ஏற்படத்தான் செய்யும் நீங்களே கூடப் புறவாசல் வழியாக பேச வேண்டியவர்களுடன் டீல் பேசி கேஸை அமுக்க மாட்டீர்களா? அவர்கள் வெளிப்படையாக முகாம் மாறுகிறார்கள் அவ்வளவுதான்