dinamalar telegram
Advertisement

46 . போராட்டத்திற்கு கிடைத்த புதிய நண்பர்

Share

1932ஆம் ஆண்டு மூன்றாவது வட்டமேஜை மாநாடு தோல்விக்குப் பிறகு அரசு பல முன்னணி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தது. நேதாஜியும் கைது செய்யப்பட்டார்.


அவருக்கு எத்தனை ஆண்டுகள் சிறை என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. ஜபல்பூரிலும் பின்னர் சென்னை சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறை அவருக்கு மீண்டும் காசநோயை கொண்டு வந்தது.
நேதாஜியை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பல தலைவர்கள் முன்வைத்தனர். தொண்டர்களும் பல்வேறு போராட்டங்களில் இறங்கினார்கள். விடுதலைக்குப் பின்பு இந்தியாவில் வசிக்க கூடாது என்ற நிபந்தனையை விதித்தது ஆங்கிலேய அரசு.


1933 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாகவும், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாலும் வெளிநாடு செல்வதற்கு ஒப்புக்கொண்டார் நேதாஜி.


அடுத்த மாதமே அவர் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று ஓரளவு நோயிலிருந்து மீண்டார். அதன் பிறகு ஜெர்மனி இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்று பல தலைவர்களை சந்தித்து இந்தியாவின் விடுதலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். வியன்னாவில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சகோதரர் விட்டல் பாய் படேலுடன் தொடர்பு கொண்டார். அவரும் நேதாஜி போன்றே புரட்சிகரமான சிந்தனை உடையவராக இருந்தார். எனவே இருவருக்கும் இடையே சிறந்த நட்பு வளர்ந்தது.


(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநில செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement