சுதந்திரப் போராட்டத்தை எண்ணற்ற தலைவர்கள் இந்தியாவில் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்கள். பாலகங்காதர திலகருக்கு பிறகு சுதந்திரப் போராட்டத்தின் மையமாக காந்தி உருவாகி கொண்டிருந்தார்.
எத்தனையோ தலைவர்கள் போராடிக்கொண்டு இருந்தாலும் மற்றவர்களைகா காட்டிலும் நேதாஜியை பார்த்துதான் ஆங்கிலேயர்கள் அதிகம் பயந்தார்கள். நேதாஜியின் உறுதியான மனப்போக்கு ஆங்கிலேயர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தனக்கு இருந்த செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு மூலமாக மக்களை ஒன்று திரட்டுவதில் நேதாஜி வெற்றி கண்டிருந்தார்.
உணர்ச்சிகரமான பேச்சுக்கள் மூலம் ஆங்கிலேயரை நெருப்பாக சுட்டார். அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கு ஆங்கிலேயருக்கு அச்சத்தை உண்டுபண்ணியது. நேதாஜி நினைத்தால் மக்களை புரட்சியாளராக மாற்ற முடியும் என்பதையும் எல்லா மக்களையும் ஒன்று திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதையும் ஆங்கிலேயர்கள் உணர்ந்திருந்தார்கள்.
(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!