புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிறைவாசிகளுக்கு உயர் தர சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு பிரிவை, அந்த பகுதியைச் சேர்ந்தவரான, சட்டம் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் திறந்து வைத்தார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள, புரட்சித் தலைவர் அரசு இது...' என்றார். சில வினாடிகளில் சுதாரித்தவர், 'தமிழக முதல்வர் தளபதி அரசு...' என்று கூறி சமாளித்தார்.
அவரை சுற்றியிருந்த தி.மு.க., பிரமுகர் ஒருவர், 'ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் இருந்த அமைச்சர் ரகுபதிக்கு, பழைய பாசம் இன்னும் இருக்கு... அதனால் தான், தி.மு.க.,வில் இருந்தாலும் அவரின் அடி மனதில், எம்.ஜி.ஆர்., இன்னமும் இருக்கிறார்...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.
இப்படி ஸ்லிப் ஆகி, மீடியாவில் பரப்பினால் முதலுக்கே மோசமாயிற்றே