Load Image
dinamalar telegram
Advertisement

'பதவியேற்ற நேரம் சரியில்லையோ!'

'பதவியேற்ற நேரம் சரியில்லையோ!'



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும், தி.மு.க., நிர்வாகிகளிடம், பால்வளத் துறை அமைச்சர் நாசர் மனு
பெற்றார்.பின், அவர் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, சோதனை காலமாகவே இருக்கிறது. முதலில், கொரோனா தொற்று பரவலை முடியறிக்கும் பொறுப்பு இருந்தது. இப்போது கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்... கொரோனா, வெள்ள நிவாரணம் என ஓடிக் கொண்டே இருக்கிறோம்... பதவிக்கு வந்து ஏழு மாதம் ஆகியும் போராட்டமாகவே இருக்கிறது...' என்றார்.அங்கிருந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'ஸ்டாலின், முதல்வராக பதவியேற்ற நேரம் சரியில்லைன்னு சொல்லுறாரா...' என்றார்.அருகிலிருந்தவர், 'இவரின் அமைச்சர் பதவிக்கு, 'வேட்டு' வைக்கிறீங்க போல...' என்றதும்

சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    பதவிக்கு வந்து ஏழு மாதம் ஆகியும் போராட்டமாகவே இருக்கிறது..' என்றார் அமைச்சர் நாசர்.. பின் என்ன உட்கார்ந்த இடத்திலிருந்து கல்லா கட்டவா அமைச்சர் ஆனார் ??

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கொரோனா இன்று நேற்று வரவில்லை முந்தைய அரசும் இப்போராட்டத்தையே சந்தித்தது தொடர்மழை இருக்கட்டும், பருவ மழைக்கே முன்னேற்பாடின்றி வேண்டாத திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்துவிட்டு சோதனை, வேதனை என்று புலம்பி என்ன பயன் ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement