Load Image
dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பு கடைகளின் ஆபத்பாந்தவ அதிகாரி!

ஆக்கிரமிப்பு கடைகளின் ஆபத்பாந்தவ அதிகாரி!''கட்சியில சேர தடை விழுந்துட்டதால, 'அப்செட்'ல இருக்காருங்க...'' என, பெஞ்ச் பேச்சை துவக்கினார் அந்தோணிசாமி.

''யாருன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் புத்திசந்திரன், கட்சியில ஈடுபாடு இல்லாம ஓரங்கட்டப்பட்டார்... அதே நேரம், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமா இருந்தாருங்க...

''வேலுமணி மேல ஆளுங்கட்சி தரப்புல ரெய்டு, வழக்குன்னு நெருக்கடி அதிகரிக்கிறதால, அவர் கூடவே இருந்தா நமக்கும் சிக்கல்னு புத்தி சந்திரன் நினைக்கிறாருங்க... அதனால, தி.மு.க.,வுக்கு தாவ, காய் நகர்த்தினாருங்க...

''ஆனா, 'அவரை சேர்க்கிறதால, கட்சிக்கு எந்த பலனும் இல்லை'ன்னு உள்ளூர் நிர்வாகிகள் மேலிடத்துக்கு போட்டு குடுத்துட்டாங்க... மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரனுக்கும், அவரை சேர்க்கிறதுல விருப்பம் இல்லை... இதனால, புத்தி பயங்கர 'அப்செட்'ல இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''இதே மாதிரி, என்கிட்டயும் ஒரு மேட்டர் இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவை மாவட்டத்துக்கு பொறுப்பா அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமிச்சதுல, பல அதிரடி நடவடிக்கைகள்ல இறங்கிட்டாரு... சமீபத்துல, சூலுார் ஒன்றியத்துல நாலு அ.தி.மு.க., கவுன்சிலர்களை 'கவனிச்சு' தங்கள் பக்கம் இழுத்து, ஒன்றியத்தை தி.மு.க., வசம் கொண்டு வந்துட்டாரு வே...

''அடுத்து, மாவட்ட அ.தி.மு.க.,வுல இருக்கிற பெரிய தலைகளுக்கு குறி வச்சிருக்காரு... இதுல, பெரிய மீன் ஒண்ணு சிக்கிட்டதாகவும், சீக்கிரமே தி.மு.க.,வுல ஐக்கியமாவார்னும் சொல்லுதாவ... அது இவரா இருக்குமோ, அவரா இருக்குமோன்னு, அ.தி.மு.க.,வினர் தங்களுக்குள்ள பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.உடனே, ''போலீஸ் அதிகாரி மேல புகார் குடுக்க போறா ஓய்...'' என, பரபரப்பான தகவலுடன் கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''சென்னையை அடுத்து தாம்பரத்துல இருக்கற ஒரு போலீஸ் அதிகாரியைத் தான் சொல்றேன்... இவர், தன் ஏரியாவுல, ஒரு நம்பர் லாட்டரி, 24 மணி நேரமும் சரக்கு விற்பனைன்னு, எல்லா சட்டவிரோத செயல்களுக்கும் 'பர்மிஷன்' குடுத்துருக்கார் ஓய்...

''இது போக, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீவா வணிக வளாக நுழைவு பகுதி, சண்முகம், அப்துல் ரசாக் சாலைகள்ல மட்டும் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அனுமதி தந்து, மாசா மாசம், 50 ஆயிரத்துல இருந்து 1 லட்சம் ரூபாய் வரை மாமூல் வசூலிக்கறார் ஓய்...

''சமீபத்துல ஆக்கிரமிப்புகளை அகற்ற போன மாநகராட்சி அதிகாரிகளை, கடைக்காரா சிலர், போலீஸ் அதிகாரிக்கு மாமூல் தர்ற கெத்துல, ஆபாசமா பேசியிருக்கா... இதனால, மாமூல் அதிகாரி மேல நடவடிக்கை எடுக்கணும்னு, மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளை சந்திச்சு பேச முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.அப்போது, ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர்பாய், ''சார்லஸ் சொல்லுங்க... உங்க போனுக்கு தான் காத்துட்டு இருந்தேன் பா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்கள் அரட்டை தொடர்ந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கட்சி மாறினால் ஊழல்கள் எல்லாம் கழுவப்பட்டு, புனிதராகி, அமைச்சராகக்கூட வாய்ப்பு இருக்கும் முன்னுதாரணம் இப்படித் 'தாவும்' எண்ணத்தை வளர்க்கிறது இன்னும் கொஞ்சம் எதிர்ப்பாளர்களை 'தன்னைக்கட்டிப்' பாருங்க.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement