கடலுாரில், மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.
அவர் கூறுகையில், 'ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்யலாம். ஜெய் பீம் படத்தை எதிர்ப்போர், சூர்யா நடித்த படத்தை திரையிட விட மாட்டோம் என கூறுவது ஏற்புடையதல்ல...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது; விடுதலைபுலிகள் பற்றி படம் எடுக்க கூடாதுன்னு தமிழகத்தில் சிலர் குரல் கொடுத்த போதெல்லாம், இந்த, கம்யூ.,காரங்க சீனாவில் இருந்தாங்களா...' என்றதும், சுற்றியிருந்தோர், 'ஆமாம், அதானே' என ஆமோதித்தனர்.
படத்தில் தனது றொலைப்பற்றியும், இயக்குனருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்தான் நடிகர்கள் அவர் எந்த பாத்திரத்துக்கு என்ன பெயர் வைத்தார், செட்டில் என்ன வைத்தார் என்று ப்ரொடக்ஷன் மேனேஜர், அசிஸ்டன்ட் டைரக்டர் வேலையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பாரா? சூர்யாவை மட்டும் குறி வைப்பதில் உள்நோக்கம் தெரிகிறது