பள்ளிக்குள் புகுந்த மழைநீர் சீரமைக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை
அனுப்பர்பாளையம்: திருப்பூரில் கடந்த இரு தினங்கள் முன் பெய்த கன மழைக்கு பலர் பாதிக்கப்பட்டனர்.மழை நீர் தேங்கத்தால் பள்ளிகள் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட பகுதிகளை, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.போயம்பாளையம் நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு சென்ற அவர் அங்கு தேங்கி இருந்த மழை நீரை லாரி மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, அவிநாசி நகர் மற்றும் பாலன் நகரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.அவிநாசி நகரில் ரோட்டோரத்தில் இருந்த கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து, போக்குவரத்துக்கு இடையூறாகவும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அதனையும் சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேட்டு கொண்டார்.தி.மு.க வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், பாண்டியன் நகர் பகுதி செயலாளர் ஜோதி, மின் வாரிய தொ.மு.ச செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!