Load Image
dinamalar telegram
Advertisement

'உல்டா' ஆக்கும் துரைமுருகன்!

'உல்டா' ஆக்கும் துரைமுருகன்!



வேலுார் மாவட்டம் காட்பாடியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது, 'பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதே?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன், 'பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதே, பா.ஜ., அரசு தான். பிரதமர் மோடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு அந்த கட்சிக்காரர்களுக்கு தைரியம் வந்துள்ளது வரவேற்கத்தக்கது' என்றார்.

அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பெட்ரோல், டீசல் விலையை, ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்தால், விலை பாதி அளவு குறையும் என மத்திய அரசு சொன்னபோது, அதை வேண்டாம் என மறுத்தது, தி.மு.க., அரசு தானே... இப்போ கதையை, 'உல்டா' ஆக்குறாரே...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

'பிரயோஜனம் இல்லையோ?'



கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடீர் குப்பத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, காங்., மாநில தலைவர் அழகிரி பார்வையிட்டார்.பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'மழையால் பாதித்த மக்களின் தேவைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்... மழை பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்... கடலுாரில் வெள்ளப் பெருக்கு குறித்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'மாவட்ட நிர்வாகத்தை சொல்லுறார்... மத்திய அரசை சொல்லுறார்... இடையில இருக்குற மாநில அரசு பற்றி எதுவும் சொல்ல மாட்டேங்கிறாரே...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'தி.மு.க., அரசிடம் என்ன சொன்னாலும் பிரயோஜனம் இல்லைன்னு நினைக்கிறாரோ...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

'வாட்ஸ் ஆப்' கதை வேலைக்கு ஆகாது!



கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் பாஸ்கரன் பேசுகையில், 'கிராம சுகாதார செவிலியர்களை வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுங்கள் என, நெருக்கடி கொடுக்கின்றனர்... விருப்பம் இருந்தால், மக்கள் தானே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வர்... சிலரிடம், 'தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்' என்றால், 'கட்டாயப்படுத்துறாங்க'ன்னு 'வாட்ஸ் ஆப்' மூலம்
தவறான தகவலை பரப்புறாங்க...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தடுப்பூசி போன்ற முக்கிய விஷயங்கள்ல, நம் நாட்டு மக்கள்கிட்ட கெஞ்சினா வேலைக்கு ஆகாது... கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்துக்கணும்... 'வாட்ஸ் ஆப்' கதை எல்லாம் சொல்லி, 'எஸ்கேப்' ஆக கூடாது...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    என்ன, மக்களை இழுத்துவந்து ஊசி போடா வேண்டுமா ? சுகாதார அதிகாரிகளையே பூச்சாண்டியாக்கி மக்களை ஓட விட்டுவிடுவார்களா ?

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement