Load Image
dinamalar telegram
Advertisement

சசிகலா உறவினர் கம்பெனியில் கூடுதல் 'சரக்கு' கொள்முதல்!

சசிகலா உறவினர் கம்பெனியில் கூடுதல் 'சரக்கு' கொள்முதல்!




''கும்பி எரியுது... குடல் கருகுது... பட்டத்து இளவரசருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒரு கேடான்னு, கடுமையா விமர்னம் செய்திருக்காவ வே...'' என, பரபரப்பான தகவலுடன் பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமி

அண்ணாச்சி.

''ஊரெல்லாம் மழை பெய்து, வெள்ளக்காடா இருக்கு... இப்ப, யாருங்க பிறந்த நாள் கொண்டாடிட்டு இருக்கிறது...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, வர்ற 27ம் தேதி பிறந்த நாள்... அவர், எம்.எல்.ஏ., ஆனதும் வர்ற முதல் பிறந்த நாளுங்கிறதால, கோலாகலமா கொண்டாட திட்டமிட்டு, துாத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்காவ வே...

''இதை கண்டிச்சு, பா.ஜ.,வினர் பலரும் சமூக வலைதளங்கள்ல கடுமையா விமர்சனம் செய்திருக்காவ... 'தலைநகரம் தத்தளிக்க, தென்குமரி வெள்ளத்துல மூழ்க, உதயநிதி பிறந்த நாளை கொண்டாட மாவட்டம், மாவட்டமா ஆலோசனைக் கூட்டம் அவசியமா'ன்னு வறுத்து எடுத்துட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கடன் கேட்டு கால் கடுக்க காத்திருக்காங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.

''யாருக்கு, எந்த பேங்க்ல கடன் தர மாட்டேங்கறா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''நீலகிரியில இருக்கிற கூட்டுறவு கடன் சங்கங்கள்ல, நிறைய விவசாயிகள் கடன் கேட்டு விண்ணப்பிச்சிருக்காங்க... இதுக்காக, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., மற்றும் தாசில்தாரிடம், தங்களது நிலத்துக்கான அனுபவச் சான்று வாங்கி, கடன் சங்கங்கள்ல விண்ணப்பிச்சிருக்காங்க பா...

''கடன் சங்க செயலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் கடன் வழங்க பரிந்துரைத்தும், 'கவனிப்பு' வராததால கள அலுவலரா இருக்கிற அதிகாரி, விண்ணப்பங்களை, 'ரிஜக்ட்' பண்ணிட்டு இருக்காரு... கள அலுவலர், 15க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு பொறுப்பாளரா இருக்கிறதால, அந்த சங்கங்கள்ல கடன் கேட்டு விண்ணப்பிச்சவங்க எல்லாம் பாதிக்கப்பட்டிருக்காங்க... இது சம்பந்தமா சிலர், முதல்வரின் தனிப்பிரிவுக்கே புகார் அனுப்பியிருக்காங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.

''ரவி தம்பி, இந்த பேப்பரை அங்க வைச்சிடுங்கோ...'' என்ற குப்பண்ணாவே, ''கூடுதல் சரக்கு வாங்க, 'ஓகே' சொல்லிட்டா ஓய்...'' என்றார்.

''டாஸ்மாக் விவகாரமா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''ஆமாம்... டாஸ்மாக் நிறுவனம், 11 கம்பெனிகளிடம் இருந்து மது பானங்களையும், ஏழு கம்பெனிகளிடம் இருந்து பீர்களையும் கொள்முதல் செய்யறது... இதுல, சசிகலாவின் உறவினர்கள் நடத்துற கம்பெனியும் அடக்கம்...

''அ.தி.மு.க., ஆட்சிக்கு வர்றச்சே, சசிகலா தரப்பு கம்பெனியில தான் அதிகமா சரக்கு கொள்முதல் செய்வா... போன ஆட்சியில பழனிசாமி முதல்வரா இருந்தப்ப, கொள்முதல் அளவை குறைச்சிட்டா ஓய்...

''சமீபத்துல சசிகலா சொந்தங்கள், புதிய ஆட்சியின் குடும்ப வாரிசுகளை சந்திச்சு பேசியிருக்கா... அப்ப, தங்களிடம் கூடுதல் சரக்குகளை கொள்முதல் செய்யணும்னு கேட்டிருக்கா... ஆளும் தரப்புலயும் அதுக்கு சம்மதிச்சுட்டா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''அது சரி... அரசியல்வாதிகள் எல்லாம் விபரமா தான் இருக்காவ... காசு குடுத்து குடிக்கிறவங்க தான் ஏமாளிகளா இருக்காவ வே...'' என, அலுத்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement