Load Image
dinamalar telegram
Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: கடந்த ஆட்சி காலத்தில், மாணவர்கள் நேரடி வகுப்பில் தான் படிக்க வேண்டும் என, அரசு முடிவெடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது தி.மு.க.,வும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் தான். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அரசை எதிர்க்க, எதையும் சொல்வதும், செய்வதுமாக இருந்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாறுவது அரசியல் மோசடித்தனம்.


'டவுட்' தனபாலு: இதைத் தான் அவர்கள் அரசியல் என கருதுகின்றனரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. மேலும், ஆட்சிக்கு வருவதற்காக பலவாறாக கூப்பாடு போட்டு, கூட்டணி சேர்த்து, பொய் வாக்குறுதிகளை சொல்லி விட்டனரோ என்ற, 'டவுட்டும்' வருகிறது. இனிமேலாவது நாட்டின் நலம், வளர்ச்சியில் அரசியல் செய்யாமல் இருந்தால் சரி தான்!முதல்வர் ஸ்டாலின்:
தமிழகத்தின் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி; வள்ளியூர் - திருச்செந்துார் உள்ளிட்ட எட்டு சாலைகள் மிகவும் முக்கியமானவை. இந்த சாலைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றி, தேவையான நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள வேண்டும்.


'டவுட்' தனபாலு: முதல்வர் பிற பணிகளில், 'பிசி'யாக இருப்பதால், நல்ல நாளிதழ்களை படிப்பதில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், பா.ஜ., ஆளும் உ.பி., மாநிலத்தின் பல சாலைகள், 12 வழிச்சாலைகளாக உள்ளன. இன்னும் பல, எக்ஸ்பிரஸ் சாலைகளாக உள்ளன. சமீபத்தில் ஒரு சாலையில், மிகப் பெரிய விமானமே வந்திறங்கியது. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முடக்கினீர்கள். இப்போது, 'துக்கடா' சாலைகளை நெடுஞ்சாலையாக ஆக்க கோரிக்கை விடுக்கிறீர்கள்... எல்லாம் தமிழகத்தின் தலையெழுத்து!


நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு:
சென்னையில் எவ்வளவு அதிக மழை பெய்தாலும் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, தண்ணீர் தேங்காதவாறு, நிரந்தர தீர்வு காண பணி துவங்கியுள்ளது. இந்த பணி முடிவடையும் போது, சென்னை மாநகரில் எவ்வித பிரச்னையும் இருக்காது.


'டவுட்' தனபாலு: அப்போ, இதுவரை சென்னை நகரில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலைகள் போடப்பட்ட போது, 'வெள்ளம் வந்தால் சமாளிப்பது எப்படி' என்பது பற்றி யோசிக்கவே இல்லையோ... மாநகராட்சி மற்றும் சாலைகள் துறைகளில் இருக்கும் இன்ஜினியர்கள், தகுதியானவர்கள் இல்லையோ... கால்வாய்கள், நீர் செல்லும் பாதைகளை அமைக்கும் போது, வெள்ளம் பற்றி எண்ணவே இல்லையோ என்பன போன்ற பல, 'டவுட்'டுகள் வருகின்றன!

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து (7)

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  கட்சிகள் எல்லாமே தேர்தலுக்கு முன் வாய் கிழியைப்பேசி, வென்று வந்ததும் சுத்தமாக மாறி தங்களுக்கு லாபம் பார்க்க மட்டும்தான் உள்ளன. இதில் விதிவிலக்கை எதிர்பார்க்கலாமா ?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  மோசடி செய்வது விடியல் அரசு தான் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. தேர்தலுக்கு சொன்ன பொய் மூட்டைகள் ஒன்று ஒன்றாக அவிழ்கின்றன. ஏற்காமலிகள் மக்கள் என்பதை மற்றுமொரு முறை தீ மு க்க அரசு நிரூபித்து விட்டாது.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  சென்னை நகரில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலைகள் போடப்பட்ட வில்லை. ரோடுகள் தோண்டி போடப்படாமல் வெறுமனே மேலே மேலே ஒட்டப்பட்டன.. அதனால் ரோடுகளின் உயரம் அதிகமாகி கட்டிடங்கள் பள்ளமாக போய்விட்டது. என்பதே உண்மை விவரம்.. நீர்போகும் பாதை ஆக்கிரமிப்பு தனி விவகாரம். IIT வல்லுனர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சொன்னால் அரசு செவிமடுக்குமா? ?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  எதிர் கட்சியாக இருக்கும் போது எதையும் பினாத்தலாம். பதவி சுகம் கிடைக்கும்போது எல்லாமெ மரந்து விடும். இது விடியலுக்கு விலக்கல்ல.. இப்போ அதை நினைத்து வாந்தி வருகிறது.

 • rajan - erode,இந்தியா

  சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை என்பது விளை நிலங்களை அழிப்பது மட்டுமல்லாமல் யாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது என்பதையும் டவுட் தனபாலு சொல்லலாமே

 • rajan - erode,இந்தியா

  எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அரசை எதிர்க்க, எதையும் சொல்வதும், செய்வதுமாக இருந்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் மாறுவது அரசியல் மோசடித்தனம். பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மோடியை அரசியல் மோசடி செய்பவர் என்று அண்ணாமலை சொல்லுகிறார்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement