'இன்னமுமா நம்புறீங்க?'
வேலுார் மாவட்டம் காட்பாடியில், 68வது கூட்டுறவு வார விழா சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'நீர்நிலையை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.அங்கிருந்த அரசு ஊழியர் ஒருவர், 'ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 'ஆத்துல சட்டவிரோதமாக மண் அள்ளுங்க'ன்னு சொன்னவங்க... இப்போ கலெக்டர் நடவடிக்கை எடுத்தால் விடுவாங்களா...' என்றார்.அருகிலிருந்தவர், 'அட, இவங்க மேடையில் பேசுறதை எல்லாம் இன்னமுமா நம்புறீங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.
அப்படியே கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்தால் கட்சி ஆட்கள், பெருந்தலைகள் அவரைத்தான் மாற்றுவார்கள் இது அவருக்குத் தெரியாதா?