சிப்பி போன்றவற்றின் ஓடுகள், சமைத்த பின் வீணாக வீசப்படுகின்றன. இவை, விரைவில் மக்காதவை என்பதால், குப்பை மேடுகள் அல்லது கடற்கரையோரங்களில் கொட்டப்படுகின்றன. உலகெங்கும் ஆண்டுக்கு ஏழு மில்லியன் டன்கள் கடல் சிப்பிகளை கடலுணவகங்கள் வீணாக்குகின்றன.ஆனால், இதே சிப்பியில் தான் சிமென்டுக்கு பயன்படும் கால்சியம் கார்பனேட் தாது இருக்கிறது.
எனவே, சியோல் மற்றும் லண்டனைச் சேர்ந்த நியூடேப்- 22 என்ற அமைப்பு, கடல் சிப்பிகளை சேகரித்து, பொடியாக்கி, வார்ப்பு செய்து சீஸ் ஸ்டோன் என்ற செங்கல் செய்யும் முறையை உருவாக்கியுள்ளன.
வெவ்வேறு நிறம் மற்றும் தோற்றம் கொண்ட சிப்பிகளை அரைத்துக் கலக்கும்போது, வெவ்வேறு வண்ண சிப்பிச் செங்கல்கள் கிடைக்கின்றன.இது அலங்காரத்திற்கு மட்டுமல்லாமல், வீடு கட்டவும் பயன்படுத்தலாம் என, நியூடேப் அமைப்பினர் கருதுகின்றனர். சீஸ்டோன் செங்கல் சூளையில் வைத்து சுடப்படுவதில்லை. எனவே அவற்றை நம்பி வீடுகள் கட்ட முடியாது. இதனால், சிப்பி செங்கல் செய்யும் கலவையில் எதைச் சேர்த்தால், அது மேலும் சிமென்டைவிட உறுதியாகும் என்ற ஆராய்ச்சி தொடர்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!