ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்று அனைவருடனும் இணைந்து இருபதாவது வருடமாக இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை கோவை பாரத மாதா நற்பறி அறக்கட்டளையினர் கொண்டாட உள்ளனர்.
இந்த வருடம் கூடுதலாக கொரோனா காரணமாக பணமின்றி தவிக்கும் குடிசை வாழ் மக்களுடனும் சேர்ந்து கொண்டாட எண்ணியுள்ளனர்.
கோவையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து பாராத மாதா நற்பணி அறக்கட்டளை அமைப்பினை துவக்கினார் எம்.கெளரிசங்கர்.வறுமையின் காரணமாக கல்வி கற்பது தடைபடக்கூடாது என்பதால் அப்படிப்பட்ட சூழலில் சிக்கிய சிறுவர் சிறுமிகளை படிக்கவைப்பதையே நற்பணியின் பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டார்.
இப்படி படிக்கும் குழந்தைகள் சிலரை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து அங்கு இருந்து படிக்க வைத்தார் அப்போதுதான் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் நற்பணி அமைப்பின் சேவை தேவை என்பதை உணர்ந்தார்.அத்தோடு அவர்களோடுதான் இனி தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவது என்றும் முடிவு செய்தார்.
அதன்படி 20 வருடமாக தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுடன்தான் கொண்டாடி வருகிறார்.அன்றைய தினம் சுவையான உணவு பலகாரம் பட்டாசுகளுடன் தீபாவளியின் மகிழ்ச்சியை அவர்களும் அனுபவிக்க காரணமாக இருக்கிறார்.மேலும் அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான மளிகை உள்ளீட்ட பொருட்களையும் தீபாவளி போனசாக வழங்குகிறார்.அத்துடன் உறவினர்களையும், நண்பர்களையும் தங்களது மற்றும் குடும்பத்தினர் பிறந்த நாள் திருமண நாள் முன்னோர்கள் நினைவு நாள் போன்ற நாட்களையும் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்திட வேண்டுகோள் வைத்து அதுவும் நடந்து வருகிறது.
தீபாவளி கொண்டாட்டத்திற்காக இவரும் இவரது நண்பர்களும் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிவைத்துக் கொள்கின்றனர்.இவர்களது சேவையை பார்தது மனமுவந்து கொடுப்பவர்களும் உண்டு.
இருபது வருடத்திற்கு முன்பாக ஒரே ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் துவங்கிய இந்த தீபாவளி கொண்டாட்டம் இப்போது கோவையில் உள்ள ஐந்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற இல்லங்களில் கொண்டாடும் அளவிற்கு அதிகரித்துள்ளது.
கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு இந்த நற்பணி இயக்கத்தினர் சேவை செய்தனர் தெருவில் குப்பை கூட்டுபவர்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்குவது,தடுப்பூசி போடும் இடங்களில் வரிசையை ஒழுங்குபடுத்துவது,தடுப்பூசி போடுவதற்கான பிர்ச்சாரம் மேற்கொள்வது,கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கொடுப்பது உள்ளீட்ட சேவைகள் செய்தனர்.
இப்படி பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வரும் பாரத மாத நற்பணி அமைப்பினரின் சேவைகளை பாராட்டி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதல் சொற்பொழிவாளர் சுகி.சிவம் வரை வாழ்த்து மடல் அனுப்பியுள்ளனர்.
இரண்டு வருட கொரோனாவிற்கு பிறகு இந்த வருடம்தான் எல்லா பக்கமும் தீபாவளியின் மகிழ்ச்சி மெள்ள எட்டிப்பார்க்க துவங்கியுள்ளது இந்த மகிழ்ச்சி பாரத மாதா நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளால் எல்லோருக்கும் பரவுவதில் கூடுதல் மகிழ்ச்சி.
கெளரிசங்கருடன் பேசுவதற்கான எண்:70922 36848.
-எல்.முருகராஜ்.
ஆனால் கிறித்துவர்கள் மக்களுக்கு உதவி செய்வதுபோல் நடித்து கொள்ளை அடிக்கிறார்கள். இதை கண்டிக்கவேண்டும்.