dinamalar telegram
Advertisement

'அனைவரையும் விடுதலை செய்யலாமே!'

Share

'அனைவரையும் விடுதலை செய்யலாமே!'



திருச்சி மத்திய சிறையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு, கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின், நிருபர்களிடம் கூறுகையில், 'திருச்சி மத்திய சிறையில், 1,517 தண்டனை கைதிகள் உள்ளனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படுவோரின் பட்டியல் தயாராகி வருகிறது. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள, ஏழு பேரின் விடுதலைக்கு தமிழக அரசு முழு முயற்சிகளை மேற்கொள்ளும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அதென்ன ஏழு பேருக்கு மட்டும் முன்னுரிமை... கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற 'நற்செயலில்' ஈடுபட்டு சிறையில் உள்ள அனைத்து குற்றவாளிகளையும் தி.மு.க., அரசு விடுதலை செய்யலாமே...' என்றதும், சுற்றியிருந்தோர் வேதனையோடு புன்னகைத்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement