dinamalar telegram
Advertisement

'இது மட்டும் சரியோ?'

Share

'இது மட்டும் சரியோ?'



திண்டுக்கல்லில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'விலை மதிப்பு மிக்க நகை, பல ஆயிரம் கோடி ரூபாயைப் பாதுகாக்க, கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் கல்லுாரிகள் துவக்குவது வரவேற்கத்தக்கது. அதே சமயம் பேராசிரியர், பணியாளர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல...' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'முஸ்லிம், கிறிஸ்துவ கல்வி நிலையங்களில் மட்டும் ஹிந்துக்கள் பணியாற்ற கூடாது என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளத்தக்கதோ... கூட்டணிக்காகவும், தேர்தல் நேரத்தில் கொடுக்கும், 'பெட்டி'க்காகவும், தி.மு.க.,வின் கிளை கழகமாகவே கம்யூ., மாறி விட்டது போல...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement