dinamalar telegram
Advertisement

தி.மு.க., - அ.தி.மு.க., அதிரடி 'பிளான்': ஜெயிக்கப்போவது யாரு?

Share

''கொரோனா கட்டுப்பாடு போயே போச்சு. தீபாவளி, இப்பவே களைகட்டுது,'' என, மத்தாப்பாய் பேச்சை துவக்கினாள் சித்ரா.''ஆமாங்க்கா. அப்படித்தான் தெரியுது. திருப்பூர் சிட்டி போலீஸ் அதிகாரி, ஸ்டேஷன் அதிகாரிகளை கூப்பிட்டு, 'மீட்டிங்' போட்டிருக்காங்க. 'அட்வான்ஸ்' வாழ்த்து சொன்ன அவங்க, தீபாவளின்னு சொல்லி, யாரும் என்னைப் பார்க்க வர வேணாம்னுட்டாங்களாம்.''தீபாவளி சமயத்துல ரொம்ப கவனமா வேல பார்க்கணும். தேவையில்லாத விஷயத்துல சிக்கி, கெட்ட பேரு வாங்கிக்காதீங்கன்னு 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க...''இதேபோல வர்ற அதிகாரிங்க எல்லாம் 'அட்வைஸ்' பண்ணிட்டே தான் இருக்காங்க... எவ்ளோ பேரு கேக்கறாங்கன்னு, நேர்மையான போலீஸ் ஆபீசர்ஸ் ஆதங்கப்படறாங்களாம். காக்கிச்சட்டை போட்டிருந்தாலும், உள்ளத்துலயும், வெளியேயும் கறைபடியாதவங்களைப் பார்க்கறதுதான் இந்தக் காலத்துல அதிசயமா இருக்கு'' என்று 'தத்துவம்' உதிர்த்தாள் மித்ரா.பஸ்சுக்கு 'மேக் அப்'''உன்னோட வசனத்தை கேக்க நல்லா தான் இருக்கு... ம்ம்ம்... என்ன செய்ய...''தீபாவளிக்கு நிறைய சிறப்பு பஸ்களை இயக்கப்போறதா போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. தகுதிச்சான்று வாங்க வேண்டிய பஸ்களை தயார்படுத்தி, ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு கொண்டு போய், தகுதிச்சான்று வாங்கற வேலையில போக்குவரத்து கழக அதிகாரிங்க மும்முரமா இருக்காங்க.''தகுதிச்சான்று வாங்க, வடக்கு பார்த்த ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு ஒரு பஸ்சை கொண்டு போயிருக்காங்க. பஸ்சோட முன்பக்க கண்ணாடியில் விரிசல் இருந்திருக்கு. அதுக்குமேல ஒரு 'ஸ்டிக்கர்' ஒட்டி, அது வெளியே தெரியாத மாதிரி 'மேக் அப்' பண்ணியிருக்காங்க. இதைக்கூட அதிகாரிங்க கவனிக்காம, தகுதிச்சான்று கொடுத்திருக்காங்களாம்.'அசம்பாவிதம் நடக்காத வரைக்கு பிரச்னை இல்ல... நடந்துச்சுன்னா யார் பொறுப்பு?'' என, 'உச்' கொட்டினாள் சித்ரா.''இப்படித்தான், ஒலி மாசு ஏற்படுத்தற ஏர் ஹாரன்களை, வாகனங்களில் இருந்து, ஆர்.டி.ஓ., ஆபீஸ் அதிகாரிங்க பறிமுதல் பண்றாங்க. மூணு அரசு பஸ்கள்ல இருந்து, ஹாரன்களை பறிமுதல் செஞ்சிருக்காங்க. அரசு பஸ் 'டிப்போ' விலேயே ஏர்ஹாரன் மாட்றாங்க; அவங்கள விட்டுட்டு எங்கள வந்து பிடிக்கிறாங்கன்னு, சில வாகன ஓட்டிகள் கொளுத்தி போட்டுட்டு போயிட்டாங்களாம். இதக் கேட்ட ஆபீசருங்களுக்கு முகம் அஷ்டகோணலா ஆயிடுச்சாம்'' என்றாள் மித்ரா, தனது பங்குக்கு.இவர்களிடமுமா பறிப்பது!''இந்த முறை தீபாவளி விடுமுறைக்கு, ரயில் டிக்கெட் முன் பதிவு கூட முடிஞ்சு போச்சாம்.''ரயில்வே போலீஸ்ல வேல செய்ற சிலரு, ரயில்ல வர்ற வட மாநில வாலிபர்களிடம் இருந்து, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, பணத்த பிடுங்கறாங்களாம். வேலை தேடி வர்ற எங்க கிட்டயே பறிக்கிறாங்களேனு தொழிலாளருங்க புலம்பறாங்களாம். இதை பெரிய ஆபீசருங்க கவனிச்சு நடவடிக்கை எடுக்கணும்'' என்று, பேச்சில், 'அதிகாரி' போல் மிடுக்கு காட்டினாள் சித்ரா.கூட்டணி சலசலப்பு''லிங்கேஸ்வரர் ஊர்ல ஆளுங்கட்சி கூட்டணில இருக்கற கட்சிக்காரங்க, இந்த முறை, வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு முடிவு பண்ணிட்டுதான், உள்ளாட்சி தேர்தலையே சந்திக்க போறாங்களாம்...''ஆளுங்கட்சி கூட்டணிக்குள்ள சலசலப்பு அதிகமாடுச்சு. அந்த ஊர்ல பொதுவாவே, தி.மு.க., நிர்வாகிங்க, கூட்டணியில இருக்கற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களோ ஒட்டு, உறவு இல்லாம தான் இருக்காங்க. தேர்தல் நேரத்துல கூட, கூட்டணி கட்சிக்காரங்கள மதிக்கிறது இல்லையாம். கூட்டணிக்கட்சி சார்பில, அவ்வப்போது நடக்கற ஆலோசனை கூட்டத்துல கூட, தி.மு.க., நிர்வாகிங்க கலந்துக்கறது இல்லைன்னு சொல்றாங்க.''ஆளுங்கட்சியா இருந்தும் கூட, அவிநாசிக்குள்ல நிறைய பிரச்னைங்க தீர்க்கப்படாமலேயே இருக்கறதால, பேரூராட்சி தேர்தல்ல, தங்களுக்கு செல்வாக்கு இருக்கற வார்டுகளை கேட்டு வாங்கி, போட்டி போடறதுன்னு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க முடிவு பண்ணிட்டாங்களாம். கேட்டது கிடைக்கலைன்னா, கட்சித் தலைமைகிட்ட நிலைமையை எடுத்துச் சொல்லி, தனிச்சு போட்டி போடற முடிவுக்கும் வந்துட்டாங்களாம்,'' என்று 'ரகசியத்தை' அம்பலப்படுத்தினாள், மித்ரா.''சபாஷ்…சரியான போட்டிதான். அங்கே அப்படின்னா. திருப்பூர் மாநகராட்சி தேர்தல்ல தி.மு.க., தரப்பு, வேற மாதிரி முடிவு பண்ணியிருக்கு. கூட்டணி கட்சிக்காரங்க திருப்திப்படற அளவுக்கு வார்டுகளை பிரிச்சு கொடுக்கணும்; தனிச்சும் மெஜாரிட்டி காட்டணும்னு திட்டம் போட்டு, இப்ப இருக்கற, 60 வார்டுகளை, 72 வார்டா மாத்த போறாங்களாம். 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இருக்கற வார்டை, ரெண்டா பிரிக்கற வேலையை கூட துவக்கிட்டாங்களாம்,'' என்று புதிரை விடுவித்தாள் சித்ரா.'ஓவர் பில்டப்'''சீக்கிரமா தேர்தல் வரும்ங்கற நம்பிக்கைல, சிட்டிக்குள்ள இருக்கிற ஆளுங்கட்சி வி.ஐ.பி., மக்கள்கிட்ட நல்ல பேரு வாங்கி, 'செல்வா'க்கை வளர்த்துக்க ரொம்ப மெனக்கெடறாராம்; வாக்குறுதிகளை அள்ளி வீசறாராம். எந்த பிரச்னையை மக்கள் சொன்னாலும், உடனடியா செய்து தர்ற மாதிரியே பேசறாராம். இதை தெரிஞ்சுகிட்ட கட்சித்தலைமை, 'எந்த விஷயத்துக்கும் வாக்குறுதி தராதீங்க. மக்களோட கோரிக்கைகளை மனுவா வாங்கி, மேலிடத்துக்கு அனுப்பி வையுங்க; எது, எப்போ நடக்குமோ; அது, அப்போ நடக்கும்ன்னு சொல்லி, வாய்ப்பூட்டு போட்டுட்டாங்களாம்.''ஓவர் பில்ட்-அப், ஒடம்புக்கு ஆகாதுன்னு இதைத்தான் சொல்வாங்க போல...'' என 'கலகல'த்தாள் மித்ரா.மாஜி எம்.எல்.ஏ., கோபம்''எம்.ஜி.ஆர்., 'போட்டோ'வையே இப்படிச் சுருக்கிட்டீங்களேன்னு கோவிச்சுக்கிட்டாராம், எதிர்க்கட்சி தலைவரோட பேர் கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ.,''அ.தி.மு.க., பொன்விழா தொடர்பா அச்சடிச்சிருக்கற பேனர், நோட்டீஸ்ல, கட்சிய உருவாக்கி, வளர்த்த எம்.ஜி.ஆர்., படத்தை ரொம்ப சிறுசா, 'ஸ்டிக்கர்' அளவுக்கு சுருக்கிட்டாங்க. கட்சி அழியாம இருக்கறதுக்கு, அவரு தான் காரணம். பொன்விழா ஆண்டுல, எம்.ஜி.ஆருக்கும், அவரோட படத்துக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்னு, கொஞ்சம் கோவமாவே சொல்லியிருக்காரு'' என்று அ.தி.மு.க., விவகாரத்தைக் கடைந்தெடுத்தாள் சித்ரா.''அந்தக் கூட்டத்துல பேசின அந்தக் கட்சியோட மாவட்ட செயலாளரு, இனி, நாலு மாசத்துல, மாநகராட்சிக்கு தேர்தல் வந்துடும். கட்சிக்காரங்க தயாரா இருக்கணும்ன்னு சொல்லியிருக்காரு. கூட்டணி கட்சிக்காரங்களை அரவணைச்சு, மெஜாரிட்டியில ஜெயிக்கணும்னு கறாரா சொல்லிட்டாராம். கோவை, திருப்பூர் மாநகராட்சியை எப்படியாச்சும் பிடிச்சாகணும்னு பொள்ளாச்சியில, 'அசைன்மென்ட்' தயார் பண்றாங்களாம்,'' என்று, அ.தி.மு.க.,வின் தேர்தல் திட்டத்தை வெளிப்படுத்தினாள் மித்ரா.''எங்கே 'அசைன்மென்ட்' போட்டாலும், 'அப்ரூவல்' வாங்க, தொண்டாமுத்துாருக்கு தானே போகணும்'' என, சிரித்தாள் சித்ரா.பெண்கள் ஆவேசம்''மங்கலம் பக்கத்துல இருக்கிற அக்ரஹாரம்ங்கற ஊர்ல இருக்க ஓட்டல்ல, சரக்கு விற்பனை பட்டைய கிளப்புதாம். அங்க இருக்கற ரேஷன் கடைக்கும், சுகாதார நிலையத்துக்கும் இடையில இருக்கிற சந்துதான், திறந்தவெளி 'பார்'. கலெக்டர்கிட்ட புகார் பண்ணுவோம்ன்னு மக்கள் சொல்லியிருக்காங்க.''உள்ளூர் போலீசுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, சரி பண்ணி வச்சிருக்கேன். என்னை எதுவும் செய்ய மாட்டாங்கன்னு, மார்தட்டி சொல்றாராம் ஓட்டல் உரிமையாளரு. இனி, ரோட்டுல இறங்கி போராடறதை தவிர, வேற வழியில்லைன்னு, அங்கஇருக்கிற பெண்கள் முடிவு பண்ணியிருக்காங்களாம்,'' என்று, 'பெண்களுக்கு ஜே.,' போட்டாள் மித்ரா.''சரக்குன்னு நீ சொல்லவும் தான், ஞாபகம் வருது மித்து. அவிநாசி, தெக்கலுார் பக்கம் இருக்கிற காமநாயக்கன்பாளையத்துல, 19 மற்றும் 21 வயசுல ரெண்டு பசங்க, 11 வயசு சிறுவனை கூட்டிட்டு போய், மது குடிக்க வச்சு, அவனை அரை மயக்கத்துல, கோவில் வளாகத்துல அம்போன்னு விட்டுட்டு போய்ட்டாங்கன்னு, போன வாரம் பேசினோம்ல. இதை கேள்விப்பட்ட பெரிய ஆபீசர், ரொம்ப டென்ஷனாகி, அந்த ரெண்டு பசங்க மேலேயும் 'கேஸ்' போட்டு, கம்பி எண்ண வையுங்கன்னு சொல்லியிருக்காரு. இந்த பசங்களோட பெற்றோர், பேச்சு வார்த்தை மூலமா சமாதானம் ஆகீட்டாங்களாம். 'திரும்பவும் அந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டோம்'னு எழுதி வாங்கிட்டு, அந்த பசங்கள விட்டுட்டாங்களாம் உள்ளூர் போலீஸ்காரங்க,'' என்று 'பாலோ அப்' தகவலை சொன்னாள் சித்ரா,ஆபீசர் 'டோஸ்'''சிட்டி எல்லைக்குள்ல, பாத்திர பட்டறை இருக்கிற ஊர்ல, சமீபத்தில நுால் ஏஜென்ட் ஒருத்தரை கடத்திட்டு போனாங்க. இந்த புகார் மேல, போலீஸ்காரங்க வேகமா நடவடிக்கை எடுக்காததால, பெரிய ஆபீசர் கவனத்துக்கு, பிரச்னையை கொண்டு போயிருக்காங்க. அதுக்கு அப்புறம் தான், அந்த முகவரை மீட்டு, குற்றவாளிகளை கைது பண்ணியிருக்காங்க. இது விஷயமா முன்கூட்டியே ஏன், என்கிட்ட சொல்லலைன்னு கேட்டு, பெரிய ஆபீசர், ஸ்டேஷன் ஆபீசர்களுக்கு, செம 'டோஸ்' விட்ருக்காங்க,'' என்று தகவலைப் பகிர்ந்தாள் மித்ரா.''திருப்பூர் மாநகராட்சில, ரொம்ப நாளா நிலுவையில் இருக்கிற 'பில்' தொகையை தாங்கன்னு, கான்ட்ராக்ட்காரங்க கேட்டிருக்காங்க. மாநகராட்சி கஜானா காலியா இருக்கிறதால, ஊழியர்களுக்கு சம்பளம் தர்ற அளவுக்குத் தான் பணம் இருக்கு. மிச்சம் மீதி இருக்கிற பணத்தை பிரிச்சு தர்றேன். கஜானா நிரம்பினதுக்கு அப்புறம் தான், மொத்தப் பணத்தையும் கொடுக்க முடியும், 'அட்ஜெஸ்ட்' பண்ணிக்கோங்கன்னு, கை விரிச்சிட்டாராம் பெரிய அதிகாரி,'' என்று, சித்ரா அங்கலாய்த்தாள்.'குப்பைத்தொட்டி' அரசியல்''குப்பை தொட்டில கூட அரசியல் நடந்துருக்கு.''ெஷரீப் காலனி பிரதான வீதியில, ரொம்ப நாளா ஒரு குப்பை தொட்டி இருந்திருக்கு. அங்கு ரோடு போடற வேலை நடந்தப்போ, அதை வேற இடத்துல கொண்டு போய் வச்சாங்களாம். ரோடு போடற வேலை முடிஞ்சதுக்கு அப்புறம், பழைய இடத்துக்கு குப்பைத் தொட்டியை மாத்துவாங்கன்னு பார்த்தா, மாத்தலையாம். என்ன காரணம்னு கேட்டா, அந்த இடத்தை ஒட்டி, ஆளுங்கட்சி அலுவலகம் திறக்கப் போறாங்கன்னு சொல்றாங்களாம்.''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'' எனக்கூறி சிரித்த மித்ரா, இஞ்சி டீ தயாரித்து எடுத்து வர, இருவரும் சாவகாசமாக ருசித்து பருகத் துவங்கினர்.ஆளுங்கட்சி வி.ஐ.பி., மக்கள்கிட்ட நல்ல பேரு வாங்கி, 'செல்வா'க்கை வளர்த்துக்க ரொம்ப மெனக்கெடறாராம்; வாக்குறுதிகளை அள்ளி வீசறாராம். எந்த பிரச்னையை மக்கள் சொன்னாலும், உடனடியா செய்து தர்ற மாதிரியே பேசறாராம்.ரோடு போடற வேலை முடிஞ்சதுக்கு அப்புறம், பழைய இடத்துக்கு குப்பைத் தொட்டியை மாத்துவாங்கன்னு பார்த்தா, மாத்தலையாம். என்ன காரணம்னு கேட்டா, அந்த இடத்தை ஒட்டி, ஆளுங்கட்சி அலுவலகம் திறக்கப் போறாங்கன்னு சொல்றாங்களாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement