Load Image
dinamalar telegram
Advertisement

மூணு ஓட்டுக்கு மும்முரமா நடக்குது பேரம்... முடிஞ்சதும் ஆரம்பிச்சிரும் மிரட்டல் வியாபாரம்!

ளியில் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. சுடச்சுட வெங்காய பஜ்ஜியும், பேபி கார்ன் 65யும் செய்து, டேபிளில் பரப்பியிருந்தாள் சித்ரா. இஞ்சி டீயுடன் அதைக் கொறித்துக் கொண்டே 'டிவி' சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த மித்ரா, செய்தி சேனலில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அரசியல் அரட்டையை ஆரம்பித்தாள்...''அக்கா! கோவையில தி.மு.க.,ரொம்பவே கலகலத்துப் போயிருக்கு...எப்பதான் புது நிர்வாகிகளைப் போடப்போறாங்கன்னு உடன்பிறப்புகள் உறுமிட்டு இருக்காங்க...இப்போ இருக்குற நிர்வாகிகள் மேல கட்சித்தலைமைக்கும் நம்பிக்கையில்லை. கட்சிக்காரங்களும் கடுப்புலதான் இருக்காங்க. ஒவ்வொருத்தர் மேலயும் வண்டி வண்டியா புகார் சொல்றாங்க,''''ஆமா மித்து..தலைமை நம்பி சீட்டுக்கொடுத்த அத்தனை பேரும் தோத்துப்போயிட்டாங்க. அவுங்க குடியிருக்குற ஏரியா பூத்துலயே ரெண்டாவது இடம், மூணாவது இடம்னுதான் ஓட்டு வாங்கியிருக்கிறதா தலைமைக்கு ஆதாரத்தோட புகார் போச்சு. அப்பவே இவுங்களை எல்லாம் மாத்துறதா சொன்னாங்க. ஆறு மாசமாகியும் மாத்தலை. இப்போ வேற வேற மாதிரி கம்பிளைன்ட்ஸ் குவியுது'' என்றாள் சித்ரா.''உண்மைதான் அக்கா...அதுலயும் பொறுப்பாளரா இருக்குற எக்ஸ் ஒருத்தரு, டாஸ்மாக், கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட், பில்டிங் அப்ரூவல்ன்னு எல்லாத்துலயும் மானாவாரியா வசூல் பண்ணிட்டு இருக்காராம். அதெல்லாம் கூட பரவாயில்லை; கட்சியில நிர்வாகிகளை நியமிக்கிறதுலயே செம்ம வசூல் போட்ருக்காராம். பகுதிக்கழகச் செயலாளரைப் போடுறதுக்கு 10 லட்ச ரூபா வாங்கியிருக்காராம். பணம் கொடுத்தவுங்களே பகிரங்கமா வெளியில சொல்லிட்டு இருக்காங்க,''''ஓ...அதை வச்சுத்தான் ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு, போஸ்டர் மாஸ்டர்னு பேரு வாங்கியிருக்காரு போலிருக்கு...இவர் மேல இப்பிடி கம்ப்ளைன்ட்ன்னா...இன்னொரு பொறுப்பாளரைப் பத்தி ரொம்ப கேவலமான புகாரெல்லாம் வருது.ஏற்கனவே, எலக்சன் டைம்ல அவரு வீட்டுல நடந்த ஒரு ரகளை பத்தியும், ஓட்டுக்கேட்கப்போன இடத்துல லேடீஸ்ட்ட அவர் நடந்துக்கிட்டதைப் பத்தியும் நிறைய வீடியோ, மெசேஜ் எல்லாம் வந்துட்டு இருந்துச்சு,''''அதான் ஊருக்கே தெரியுமே...அவரை தோற்கடிச்சதுல அந்த சோஷியல் மீடியா பிரசாரத்துக்கு பெரிய பங்கு இருந்துச்சே,'' என்று குறுக்கிட்டாள் மித்ரா.''ஆனா அப்புறமும் அவர் திருந்துன பாடாத் தெரியலை....இப்பவும் கட்சிக்கார லேடீஸ்ட்டயே, பதவி வாங்கித்தர்றேன், சீட்டு வாங்கித்தர்றேன்னு ரொம்ப மோசமாப் பேசுறாராம். என்னங்க உங்களை அப்பா மாதிரி நினைச்சேன்னு சொன்னா, 'இப்பிடியே எல்லாரும் சொன்னா, நான் எங்கதான் போறது'ன்னு கேக்குறாராம். அவர் இப்பிடிப் பேசுனதைப் பத்தி, தலைமைக்கும் தகவல் போயிருக்கு. என்ன ரீசன்னே தெரியலை. அவரை இன்னும் துாக்காம இருக்காங்க,'' என்றாள் சித்ரா.டிவியில் 'பையா' படத்தின், 'அடடா மழைடா அடைமழைடா' பாட்டைப் பார்த்ததும், 'நல்ல ஒரு சிச்சுவேஷன் சாங் இல்ல...!' என்று சிரித்த மித்ரா, ''இவுங்க இப்பிடின்னா, மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்ல ஜெயிச்ச தாடிக்காரர், பதவி ஏற்குறதுக்கு முன்னாடியே, டாஸ்மாக் அதிகாரிகள், சங்கத்துக்காரங்க எல்லாரையும் கூப்பிட்டு, 'ஒழுங்கா அத்தனை பார்களும் என் கன்ட்ரோலுக்கு வந்தாகணும்னு சொல்லிட்டாராம்,'' என்றாள்.''அவரு...வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமிட்ட இருந்த துணைத்தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு ரொம்ப தீவிரமா இருக்காராமே...,''''ஆமாக்கா...வர்ற 22ம் தேதி அதுக்கு எலக்சன் நடக்கப்போகுது. மொத்தம் 17 ஓட்டுல, அ.தி.மு.க.,வுல 9 பேரும், பா.ஜ.,வுல, 2 பேரும் இருக்காங்க. தி.மு.க.,வுல 5 பேரும், கொ.ம.தே.க.,வுல ஒருத்தரும் இருக்காங்க. ஜெயிக்கணும்னா இன்னும் மூணு ஓட்டு வேணும். மறைமுகத் தேர்தல்ங்கிறதால, அந்த மூணு ஓட்டை எப்படியும் வாங்கிரலாம்னு பகீரத பிரயத்தனம் பண்ணிட்டு இருக்காராம்,''''ஒரு வேளை அவர் அப்பிடி ஜெயிச்சிட்டார்ன்னா, தலைவரை டம்மியாக்கிட்டு இவர்தான் 'பவர்புல்' ஆயிடுவாரு. மாவட்டத்துல ஆளும்கட்சிக்கு அமைச்சர், எம்.எல்.ஏ., யாருமே இல்லாததால, அவர் வைக்கிறதுதான் அப்புறம் சட்டமா இருக்கும்,''''போன கவர்மென்ட்லயாவது ஏதோ ஊருக்குள்ள கொஞ்சம் வேலைகளைச் செஞ்சு, அதுல கமிஷன் பாத்துட்டு இருந்தாங்க. இப்போ எந்த ஸ்கீமும் கொண்டு வர்றது மாதிரித் தெரியலைங்கிறதால, இப்பிடி கலெக்சன்ல இறங்கிட்டாங்க போலிருக்கு...,'' என்றாள் மித்ரா.''அப்பிடிச்சொல்ல முடியாது மித்து...டைடல் பார்க் பக்கத்துல ரயில்வே மேம்பாலம் கட்டுறதுக்கு சில மாதங்களுக்கு முன்னால திடீர்னு பூஜை போட்டாங்க. அப்புறம் என்னாச்சுன்னே தெரியலை. விசாரிச்சா, ஏதோ ஆளும்கட்சிக்காரங்க கமிஷன் கேட்டதுலதான் கான்ட்ராக்ட் நிக்குதுன்னு பேச்சா இருக்கு. கழகங்கள்ன்னாலே கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்தான்,'' என்றாள் சித்ரா.''இந்தக் கொடுமையில சீக்கிரமே கார்ப்பரேஷன் எலக் ஷன் வந்துரும் போலிருக்கு...அ.தி.மு.க., கூட்டணியில பி.ஜே.பி., மட்டும்தான் இருக்கு. ஆனா தி.மு.க., கூட்டணியில ஏகப்பட்ட கட்சிகள் இருக்குறதால, நமக்கெல்லாம் சீட் கிடைக்குமான்னு தோழர்களும், சிறுத்தைகளும், ம.தி.மு.க.,காரங்களும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.''அ.தி.மு.க.,கூட்டணியிலயும் பயங்கர குழப்பமாத்தான் இருக்கு. அநேகமா கோவை மேயர் பதவியை பி.ஜே.பி., குறி வச்சுக் கேப்பாங்க. ஆனா அ.தி.மு.க.,வுல ஒருத்தருக்கு, 'நீங்கதான் மேயர் கேண்டிடேட்'ன்னு உத்தரவாதமே கொடுத்துட்டாங்களாம்,'' என்று சித்ரா சொல்லும்போதே குறுக்கே புகுந்த மித்ரா, ''அந்த அரைகுறை காலத்துக்கு டவுன்டாடியா இருந்தாரே அவர்தானே...,'' என்றாள்.''கரெக்ட் மித்து...அவர்தான் ஆளும்கட்சிக்குப் போகப்போறதா ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா அவர் போற மாதிரித் தெரியலை. இடையில அவர் கொடுத்த ரெண்டு விளம்பரத்துல அவர் போட்டோ மட்டும்தான் இருந்துச்சு. அதனால இந்த பேச்சு அதிகமா அடிபட்டுச்சு. போன வாரம் வந்த விளம்பரத்துல இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., வேலுமணி எல்லாரோட படமும் வந்துச்சு. அதனால அவர் கட்சி மாறலைங்கிறது உறுதியாயிருச்சு. மேயர் கேண்டிடேட் நீங்கதான்னு கொடுத்த உத்தரவாதத்துலதான் இந்த மாற்றமாம்,''''அதெப்பிடிக்கா....ஜெயலலிதாவால பாதி வருஷத்துல பதவி பறிக்கப்பட்டவரை, மறுபடியும் நிக்க வச்சா, கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பாதா?''''ஆனா நம்ம ஊர்ல ஒரு ஓட்டு வாங்குற பி.ஜே.பி.,க்கு, மேயர் சீட்டு தரக்கூடாதுன்னு இப்பவே அ.தி.மு.க.,வுல சில பேரு போர்க்கொடி துாக்குறாங்களாமே'' என்றாள் சித்ரா.''நானும் கேள்விப்பட்டேன்...குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டுல மொத்தம் 1551 ஓட்டு இருக்கு. அதுல 913 ஓட்டுதான் பதிவாயிருக்கு. அதுல ஒண்ணு பி.ஜே,பி.,க்கும், ரெண்டு ஓட்டு தே.மு.தி.க.,வுக்கும் விழுந்திருக்கு. பி.ஜே.பி.,சார்புல நின்னவரு, பக்கத்து வார்டுக்காரர்ங்கிறதால, அவரோட குடும்பத்து ஆளுங்க ஓட்டும் இல்லை. இப்ப அந்த ஒத்த ஓட்டும், முரசுக்கு ரெண்டு ஓட்டும் போட்டது யாருன்னுதான் இப்ப தீவிரமா தேடிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து! அரசியல் 'ஓவர்டோஸ்'ஆயிடுச்சு...வேற நியூசே இல்லையா?'' என்று பொய்க்கோபம் காட்டினாள் சித்ரா.''இருக்குக்கா... பட்...அதுலயும் பாலிடிக்ஸ் வருது. தடாகம் ஏரியாவுல செங்கல் சூளைகளை எல்லாம் 'சீல்' வச்சு மூடுன பிறகு, அதைத் திறக்கிறதுக்காக ஏகப்பட்ட முயற்சிகள் பண்ணிட்டு இருக்காங்க. இப்போ ஆளும்கட்சியைச் சேர்ந்த சூளைக்காரங்க சில பேரு, சத்தமில்லாம தடாகத்தை விட்டு தொண்டாமுத்துார் ஏரியாவுல மண் அள்ளி சூளைகளை நடத்த ஆரம்பிச்சிட்டாங்க. ஆளும்கட்சிங்கிறதால, அவுங்களை அதிகாரிகள் யாரும் கண்டுக்கிறது இல்லை,'' என்றாள் மித்ரா.போலீஸ் சைரன் சத்தம் வெளியில் கேட்டது.''கேக்கணும்னே நினைச்சேன்...அந்த லேடி இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் பண்ணுனதுல, ஏதோ உள் விவகாரம் இருக்குன்றாங்க...நீ ஏதாவது விசாரிச்சியா?''''ஆமாக்கா...அவுங்க தீவிர குற்றப்பிரிவுல இருந்தப்போ, பொருளாதார குற்றப்பிரிவுல ஒரு வழக்கை ரொம்ப லேட்டா வழக்கு பதிவு பண்ணி, குற்றவாளிகளுக்குச் சாதகமா செயல்பட்டதாச் சொல்லித்தான் அவரை சஸ்பெண்ட் பண்ணிருக்காங்க. ஆனா பொருளாதார குற்றப்பிரிவுக்கு தனியா அதிகாரிகள் இருக்குறப்போ இவுங்களை ஏன், டி.ஐ.ஜி., சஸ்பெண்ட் பண்ணாருன்னு ஒரே பேச்சா இருக்கு,''''அது என்ன கேஸ் மித்து?''''ஒரு லேடி தன்னோட கணவர் மேல புகார் கொடுத்திருக்காங்க. போலீஸ் விசாரிச்சிட்டு, கணவர் மேல தவறில்லைன்னு கேசை முடிச்சுட்டாங்க. அந்த கேசை மறுபடியும் விசாரிக்கணும்னு அந்தம்மா, இந்தம்மா கிட்ட பெட்டிஷன் கொடுத்திருக்கு. அப்பிடிப் பண்ண முடியாதுன்னு இந்த இன்ஸ்பெக்டர் சொல்லிருக்காங்க.அதைப் பத்திதான் அந்த லேடி, பெரிய அதிகாரிகளைப் பார்த்து கம்பிளைன்ட் பண்ணிருக்கு. ஏற்கனவே அந்த இன்ஸ்பெக்டர் மேல கோபத்துல இருந்த அந்த மேலதிகாரி, இதான் சாக்குன்னு சஸ்பெண்ட் பண்ணிருக்காரு. லேட்டஸ்ட்டா ரூரல் போலீஸ்ல பயங்கரமா ஜாதி அரசியல் நடக்குதுங்கிறாங்க,''''மித்து...இன்னும் ஸ்கூலே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள வசூலை ஆரம்பிச்சிட்டாங்க...பேரூர் கல்வி மாவட்டத்துல இருக்குற சில அதிகாரிங்கதான், பிரைவேட் ஸ்கூல்களைக் குறி வச்சு, ஸ்கூலுக்கு மினிமம் அஞ்சாயிரம்னு கலெக்சன் போட்டுட்டு இருக்காங்களாம். இதெல்லாம் சி.இ.ஓ.,க்கு தெரியாம நடக்குறதா சொல்றாங்க,''''தெரியலாம்...தெரியாமலும் இருக்கலாம்...ஆனா இப்பவே கன்ட்ரோல் பண்ணுனா நல்லது. இல்லேன்னா கலெக்சனை முடிச்சிட்டு வேற இடத்துக்குப் போயிருவாங்க. இப்பிடித்தான் ஹவுசிங் யூனிட்ல பயங்கரமா ரூல்ஸ் பேசிட்டு இருந்த அதிகாரி, போன வருஷம் காந்தி மாநகர்ல இருக்குற 25 சென்ட் கமர்சியல் இடத்தை, ரெண்டு கோடி ரூபாய்க்கு ஒரு டாக்டருக்கு கொடுத்துட்டுப் போயிருக்காரு. ஆனா அந்த இடத்தோட மதிப்பு நாலு கோடிக்கும் மேல இருக்குமாம். அந்த சிண்டிகேட்ல கூட இருந்த ரெண்டு பேரு, இன்னும் கோயம்புத்துார் ஆபீசுலதான் இருக்காங்க. அவுங்க மேலயாவது நடவடிக்கை எடுத்தா சரி,'' என்றாள் மித்ரா.காலிங் பெல் சத்தம் கேட்டதும், 'அக்கா! யாரோ வந்திருக்காங்க...மழை விட்ருச்சு, நான் கிளம்புறேன்,'' என்று சொல்லி விட்டு, வண்டியைக் கிளப்பினாள்.''இப்பவும் கட்சிக்கார லேடீஸ்ட்டயே, பதவி வாங்கித்தர்றேன், சீட்டு வாங்கித்தர்றேன்னு ரொம்ப மோசமாப் பேசுறாராம். என்னங்க உங்களை அப்பா மாதிரி நினைச்சேன்னு சொன்னா, 'இப்பிடியே எல்லாரும் சொன்னா, நான் எங்கதான் போறது'ன்னு கேக்குறாராம்,'' ''எப்பதான் புது நிர்வாகிகளைப் போடப்போறாங்கன்னு உடன்பிறப்புகள் உறுமிட்டு இருக்காங்க...இப்போ இருக்குற நிர்வாகிகள் மேல கட்சித்தலைமைக்கும் நம்பிக்கையில்லை. கட்சிக்காரங்களும் கடுப்புலதான் இருக்காங்க,''

Telegram Banner
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement