dinamalar telegram
Advertisement

துார்வாருவது மட்டுமே தீர்வு!

Share

தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஜனகராஜன்: பூமியின் அமைப்பு மணல் நிலப்பரப்பு, களிமண் பரப்பு, பாறைகள் என, மூன்று வகையான அமைப்பில் உள்ளது. இதில் மணல் பரப்பு பகுதிகளில் மழைநீர் எளிதில் உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர் அதிகரிக்கும். களிமண் படிவங்கள் உள்ள பகுதிகளில் ஓரளவு மழைநீர் புகுந்து, நிலத்தடி நீர் சிறிதளவு உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பாறைகள் உள்ள பகுதிகளில் மழைநீர் ஒரு துளி கூட பூமிக்கடியில் போவது கிடையாது. ஆனால், பருவ மழை பெய்தால் நிலத்தடி நீர் உயர்ந்து விடுவதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 80 சதவீத மழைநீர் கடலில் தான் வீணாக கலக்கிறது. கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் 1,000 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் மிக மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது. சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 150 - 200 அடி துாரத்திற்கு நிலத்தடி நீருடன் கடல்நீர் கலந்து விட்டது; மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரில் மாசு கலந்து விட்டது. இப்படி, நிலத்தடி நீர் பலவகையில் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. எப்படி கனிமங்களை வெட்டி எடுக்கின்றனரோ, அதேபோல 1,000 ஆண்டுகளுக்கு முன் ஊற்றுகளால் உருவான நிலத்தடி நீரை, தற்போது நாம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் இன்னும் சில ஆண்டுகளில் பாலை வனமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வழியாக நிலத்தடி நீர் உயரும் என்பது எல்லாம் மாயை. உண்மையில், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டுமென்றால், கடலில் வீணாக கலக்கும் 80 சதவீத மழை நீரை, தமிழகத்திலுள்ள 20 ஆயிரம் கோவில் குளங்கள், 30 ஆயிரம் குட்டைகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை ஆழமாக துார்வாரி, நீரை சேமித்து வைப்பது தான் தீர்வு!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement