dinamalar telegram
Advertisement

முதல்வர் குடும்பம் பெயரில் 'பலே' மோசடி புள்ளி!

Share

முதல்வர் குடும்பம் பெயரில் 'பலே' மோசடி புள்ளி!

''பொதுமக்களை அலைக்கழிக்கிறாங்க பா...'' என, சுக்குக் காபியை பருகியபடியே, விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.

''எந்த ஆபீஸ்லன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பேரூராட்சி எல்லைக்குள்ள பிறந்தவங்களுக்கு, பிறப்பு சான்றிதழை பேரூராட்சி நிர்வாகம் வழங்குது பா... ரெண்டு வருஷத்துக்கு பிறகு, சான்றிதழ் பதிவேடுகளை பக்கத்துல இருக்கிற சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பிடுறாங்க...


''சான்றிதழ்ல ஏதாவது திருத்தம் செய்யணும்னு போனா, அங்க இருந்து மறுபடியும், பதிவேடுகளை பேரூராட்சிக்கு அனுப்பி திருத்தம் செய்து, அதுக்கு அப்புறம் தான் பிறப்பு சான்றிதழ் தர்றாங்க பா...

''இப்படி திருத்தம் கேட்டு வர்ற பெற்றோர், மாணவர்களை, பேரூராட்சி, சார் - பதிவாளர் அலுவலக ஊழியர்கள் மாசக்கணக்குல அலைக்கழிக்கிறாங்க பா...

''குறிப்பா, தென் மாவட்டத்தினர் பலர் வெளியூர்கள்ல வேலைக்காக தங்கியிருக்காங்க... இவங்க, சான்றிதழ் திருத்தத்துக்காக ஒண்ணு, ரெண்டு நாள், 'லீவு' போட்டுட்டு போனா, வேலை முடியாம ரொம்பவே பாதிக்கப்படுறாங்க பா...'' என்றார்
அன்வர்பாய்.

''அதிகாரியை நெருங்கவே முடியலைங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...


''சேலம் ரயில்வே கோட்டத்துல, 'ஏ 1' அந்தஸ்து, கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தான் கிடைச்சிருக்குது... இங்க உயர் அதிகாரியா இருக்கிறவர், யாரோடவும் இணக்கமா இருக்க மாட்டேங்கிறாருங்க...

''கீழ்மட்ட அதிகாரிகளே, அவரிடம் பேச தயங்குறாங்க... கேட்டா, 'அவர், இதை விட உயர்ந்த, 'ஆபீசர் லெவல்'ல இருந்து இங்க வந்திருக்கார்'னு சொல்றாங்க... இதுக்கு முன்னாடி இருந்த அதிகாரி, ஸ்டேஷன் பசுமை தரத்துக்கான 'பிளாட்டினம் விருது' வாங்க பல
முயற்சிகளை எடுத்தாருங்க...


''அவரது முயற்சியால, பிளாட்டினம் விருது கிடைச்சிருக்கு... இப்ப இருக்கிற அதிகாரி, இந்த மாதிரி எந்த முயற்சிகளையும் செய்யாம கம்முன்னு இருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ராகேஷ்குமார், என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீரு... சொச்ச தகவலையும் கேட்டுட்டு போகும்...'' என, புறப்பட்ட நண்பரை நிறுத்திய அண்ணாச்சியே, ''முதல்வர் குடும்ப உறுப்பினர்கள் பெயர்ல, மோசடி பண்ணிட்டு இருக்காரு வே...'' என, கடைசி
தகவலுக்கு வந்தார்.

''யார் ஓய் அது...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.,வுல சின்ன பதவியில இருக்கிற ஒருத்தர், விவசாய அணி மாநில துணைச் செயலர்னு போலியா, 'விசிட்டிங் கார்டு' அடிச்சு வச்சுக்கிட்டு, கெத்து
காட்டிட்டு வலம் வர்றாரு வே...

''தொழில் துவங்க விரும்பிய சில இளைஞர்களிடம், 'என்னிடம் ஆறு குவாரிகள் இருக்கு... தினமும் 10 லோடு எம்.சாண்ட் அனுப்புறேன்'னு சொல்லி, லட்சக்கணக்குல ஆட்டையை போட்டுட்டாரு வே...

''வீட்டை வித்து தர்றேன்னு தனியார் பள்ளி நிர்வாகிக்கு 'அல்வா' குடுத்துட்டாரு... அது மட்டும் இல்லை... முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரை தவறா பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தர்றதா பலரிடமும் பணம் வசூல் பண்ணிட்டு இருக்காரு... இவரிடம் ஏமாந்தவங்க, சமீபத்துல, புதுக்கோட்டை எஸ்.பி.,யிடம் புகார் குடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''செந்தில்வேல் வந்தா எனக்கு போன் பண்ணச் சொல்லும் ஓய்...'' என, நாயரிடம் கூறியபடியே, குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • shhs -

    thenmavatthathai sernthavargala ullur velai parka sollunga, avangalala pavam local jannagal velai ilanthu kastapaduranga.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement