dinamalar telegram
Advertisement

'ரெய்டில் இருந்து தப்பிக்கட்டும்!'

Share

'ரெய்டில் இருந்து தப்பிக்கட்டும்!'



அ.தி.மு.க.,வின் பொன் விழா ஆலோசனைக் கூட்டம், புதுக்கோட்டையில் சமீபத்தில் நடந்தது.இதில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், 'அ.தி.மு.க., துவங்கிய காலத்தில் இருந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து, மீண்டும் எழுச்சி பெற்று நின்றுள்ளது. அ.தி.மு.க., சோர்வைக் கண்டாலும், பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுச்சியோடு எழுந்து நிற்கும். இந்த சோர்வு தற்காலிகமானது...' என்றார்.
அங்கிருந்த கட்சியின் தொண்டர் ஒருவர், 'கட்சி பல்வேறு சோதனைகளை கடந்தது இருக்கட்டும்... முதலில் இவங்க, வருமான வரித் துறை சோதனையில் இருந்து, 'கிளீன் ஹேண்ட்' என பெயர் வாங்கட்டும்... அப்புறம், 'பில்டப்' கொடுத்து பேசலாம்...'
என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர்களுக்கு கட்சி ஒரு கற்பக விருட்சமாக இருந்து ஊழல் வரும்படியை வாரிக்கொடுத்ததைத் தவிர கடை நிலைத் தொண்டனுக்கோ, மக்களுக்கோ என்ன செய்துவிட்டது? அம்மா இருந்திருந்தால் இப்போதுதான் சசியுடன் 'வெளியே' வந்திருப்பார் இவர்களில் எத்தனை பேருக்கு காராக்ரஹ பிராப்தி இருக்கிறதோ? பீனிக்ஸ் பறவை ஒன்று இவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement