dinamalar telegram
Advertisement

கல்வியில் மாற்றம் தேவை!

Share

'கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி'யின் முதன்மை பயிற்றுவிப்பாளரும், தலைவருமான சத்யஸ்ரீ பூமிநாதன்:

யு.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை. ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேர்வானவர்களின் மொத்த எண்ணிக்கையில் 20 - 30 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.ஆனால், இப்போது தமிழ்ப் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளில் கூட, 40 பேர் தான் தமிழகத்திலிருந்து வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் இன்று எக்கச்சக்கமான அகாடமிகள் உள்ளன; இருந்தும் 'ரிசல்ட்' நிறைய வரவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன.அதில் மிக முக்கிய காரணம், நம் திறமையான மாணவர்கள் பலர், தனியார் பணிகளுக்குச் சென்று விட்டனர். அடுத்ததாக, பல பயிற்சி மையங்களில், பயிற்சிக் கட்டணங்கள் மிக அதிகமாக வசூலிப்பதால், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மூன்றாவது, அரசு பயிற்சி மையங்களில் தரமான ஆசிரியர்கள் பணி அமர்த்தப் படவில்லை.

யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் இறுதிச் சுற்று வரை செல்லும் போட்டியாளர்களை, சில மாநில அரசுகள் ஒப்பந்த அடிப்படையில் வேறு பணியில் அமர்த்தி, அதன் பின் அவர்களை யு.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்க ஊக்கப்படுத்துகின்றன; ஆனால், அதுபோன்ற திட்டம் நம் மாநிலத்தில் இல்லை.இந்த தேர்வில் அதிகமான தேர்ச்சியை பெற, ஒப்புவித்தல் சார்ந்த கல்வி முறையை மாற்றி, மாணவர்கள் தங்களின் புரிதலைச் சொந்த வார்த்தைகளால் எழுதும்படியான முறையை செயல்படுத்த வேண்டும்.

யு.பி.எஸ்.சி., வினாத் தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹந்தியில் இருக்கும்; இது, மற்ற மாநில மாணவர்களுக்கு சுலபமாக உள்ளது.தமிழக மாணவர்களால் ஹிந்தியில் உள்ள கேள்விகளை படித்துப் புரிந்து கொள்ள முடிவதில்லை.எனவே, யு.பி.எஸ்.சி., வினாத்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெற, தமிழக அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி இல்லையெனில், மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும்.

அரசு திட்டங்கள், மாணவர்களின் மனநிலை, கல்வியின் தரம் என மூன்றையும் சரிசெய்ய வேண்டிய சூழல் தான் தற்போது உள்ளது.அரசு இவற்றிற்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான், யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், முன்பிருந்த ஆளுமையைத் திரும்பப் பெறவும் முடியும்.இவற்றையெல்லாம் செய்தால், யு.பி.எஸ்.சி., தேர்வுகளில் நம்மால் நல்ல முடிவுகளை எதிர்பார்க்க முடியும். இல்லையென்றால் தமிழகத்திற்கு மீண்டும் தலைகுனிவு தான்!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • vbs manian - hyderabad,இந்தியா

    அடிப்படையில் பள்ளிகளில் தரமான பாடத்திட்டம் வேண்டும். திறமையான ஆசிரியர் வேண்டும். இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுக்கிறது. இந்த அடித்தளம் வலுவாக இல்லை என்றால் எந்த கோச்சிங்கும் லாபம் அளிக்காது. ஆங்கிலம் ஒன்றாம் வகுப்பிலிருந்து கற்பிக்க வேண்டும். உலகில் ஜெயிக்க இது மிக மிக முக்கியம். கல்வி விஷயத்தில் தாய் மொழி பற்று வேண்டும், வெறி வேண்டாம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement