dinamalar telegram
Advertisement

ஊழலில் பங்கு எவ்வளவு; பேச்சு நடத்தும் மூவர் குழு!

Share

''கட்சியில மீண்டும் அவர சேர்க்கக் கூடாதுன்னு போர்க்கொடி துாக்கியிருக்காங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''எந்தக் கட்சியில, யாரு மேல அவ்வளவு கோபம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''கோவையைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சின்னச்சாமி, அ.தி.மு.க.,வின் அண்ணா தொழிற்சங்க மாநிலச் செயலராக இருந்தபோ, 8 கோடி ரூபாயை மோசடி செஞ்சதாக கைது செய்யப்பட்டு, ஜெயிலுக்கு போய், ஜாமினுல வெளியே வந்துருக்கார் பா...

''அ.தி.மு.க.,வில் இருந்து அவரை நீக்கினாங்க... அவர், தினகரன் கட்சியில சேர்ந்துட்டார்... அந்த வழக்கு விசாரணை நடந்துக்கிட்டே இருக்கு...

''இந்நிலையில அவரை மீண்டும் அ.தி.மு.க.,வுல சேர்க்குறதுக்கு, 'வேலும், மணியும்' ரொம்ப முயற்சி பண்ணுறாராம் பா...

''இது தெரிஞ்சதும், தொழிற்சங்கத்துல இருக்குறவங்க கொந்தளிச்சு, அவரை, அ.தி.மு.க.,வுல மீண்டும் சேர்த்தால், தமிழகம் முழுதும் கட்சியை எதிர்த்து 'போஸ்டர்' ஒட்டி, போராட்டம் நடத்துவோமுன்னு சொல்லியிருக்காங்க பா...

''அதனால கட்சித் தலைமை, இப்போ இருக்குற சூழ்நிலையில, இந்த விஷயத்துல மூக்கை நுழைக்க வேண்டாமுன்னு சொல்லியிருக்காம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''சும்மாவே இருந்தா எப்படிங்க...'' என்றபடி அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.

''ம்... விஷயத்தை பட்டுன்னு சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கடந்த அ.தி.மு.க., ஆட்சியில, சென்னை மாநகராட்சியில பல வார்டுகள்ல, 'அம்மா' குடிநீர் திட்டம் நல்ல முறையில செயல்பட்டுச்சுங்க...''சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில கிரியப்பா சாலை, நக்கீரர் நகர், திரு.வி.க., குடியிருப்பு பகுதி மக்களுக்கு காலையில 150 கேன்களும், மாலையில 150 கேன்களும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினாங்க...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்த நான்கு மாசமா, அத்திட்டத்தை முடங்கி வச்சிருக்காங்க... இதை கண்டிச்சு போராட்டம் நடத்தலாமான்னு, அ.தி.மு.க., தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் அனுமதி கேட்டுருக்காங்க... இன்னும் அனுமதி கிடைக்கலையாமுங்க...

''தேர்தல் தோல்வியால கட்சிக்காரங்க எல்லாம் சோர்ந்து போயிருக்காங்க... இப்படி போராட்டம் ஏதாவது பண்ணினா தான் கட்சியை காப்பாத்த முடியுமுன்னு சொல்லுறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.

''கோவை, திருப்பூர் மாவட்டங்கள்ல, 'ஹவுசிங் போர்டு'க்குச் சொந்தமான வணிக இடங்களை ஏலம் விட்டதுல பெரிய அளவுல ஊழல் நடக்க போறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே மேலும் தொடர்ந்தார்...

''உண்மையான நில மதிப்புல இருந்து, பாதியளவுக்கு மதிப்பை குறைச்சு நிர்ணயிச்சு, ஏலம் விட்டுருக்கா ஓய்...''ஊழல் பண்ணுறதுக்காகவே, மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த மூணு அதிகாரிகள், 'சிண்டிகேட்' அமைச்சுருக்கா ஓய்...''பல இடங்களுக்கு, மதுரையைச் சேர்ந்த ஒரே குடும்பம் தான், 'சிங்கிள் டெண்டர்' போட்டுருக்கா... இதை வாரியம் ஏத்துண்டா, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் ஓய்...

''கிடைக்கற ஊழல் பணத்துல, பெரிய பங்கு தர்றோமுன்னு, மூணு பேர் சிண்டிகேட் தரப்புல இருந்து, துறை வி.ஐ.பி.,யிடம் பேச்சு நடத்தியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

நாயர் கடைக்கு வந்த நபரிடம், ''தியாகராஜன், கரிகாலன், அருண் இவங்க எல்லாம், முத்துசாமி வாத்தியாரை பார்க்க வந்துருக்காவ... என்ன விஷயம் வே...'' என அண்ணாச்சி விசாரித்தார். நண்பர்கள், இடத்தை காலி செய்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement