Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு புலியும் 21 நாள் கிலியும்

கடந்த 21 நாட்களாக கிலி ஏற்படுத்தி வந்த டி 23 புலி உயிருடன் பிடிக்கப்பட்டு தற்போது மைசூரு வனவிலங்கு மீட்பு நிலையத்தில் பத்திரமாக உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்தப் புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்றுதான் டி23 இதன் தற்போதைய வயது 13 ஆகும்.

ஒரு காட்டில் புலிகள் அதிகம் இருக்கிறது என்றால் காடு நன்றாக இருக்கிறது என்று அர்த்தம் உயிர்சங்கிலியின் வடிவமைப்பு அப்படி.பொதுவாக விலங்குகளை வேட்டையாடும் புலி தனக்கு ஆபத்து என்றால் மட்டுமே மனிதனை அடித்து காயப்படுத்தும்
எப்போது ஒரு புலி மனிதனை தேடிப்பிடித்து அடித்து காயப்படுத்தி அவனது உடல் பாகங்களையும் ருசிக்க துவங்குகிறதோ அப்போது அது ஆட்கொல்லி புலியாகிவிடுகிறது.இது எந்த நேரத்திலும் மனித உயிர்களுக்கு ஆபத்தானது.
டி23 எப்படியோ ஆட்கொல்லி புலியாகிவிட்டது
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கெளரி என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது.பின்னர், சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது.இதைத் தவிர அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. கடைசியாக கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த பசுவன் என்பவரைக் சில வாரங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றது.
புலிக்கு நாலாவது பலி விழுந்த உடனேயே மசினகுடி மக்கள் புலியை சுட்டுக் கொல்ல கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்இது போன்ற பிரச்னைகள் வளர்வதற்கு முன்பாகவே ஆட்கொல்லி புலியை தேடிப்பிடித்து அதிகாரிகள் கொன்றுவிடுவர் இதுதான் இதுவரை நடந்து வந்தது ஆனால் இன்றைய ஊடக வளர்ச்சி காரணமாக டி23 புலி விவகாரம் விவாதப் பொருளாகியது.
போராட்டம் நடத்திய மக்கள் முன் சுட்டுக் கொல்வோம் என்று உத்திரவிட்ட அதிகாரிகள் பின் நீதிமன்ற தலையீட்டின் காரணமாக அப்படி எல்லாம் சொல்லவில்லை என்று பின்வாங்கினர்.
கொல்லுங்க இல்ல பிடியுங்க என்ற வாதம் வழுக்கவே முதல் முறையாக புலியைப் பிடிக்க மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது அது மட்டுமின்றி நுாற்றுக்கும் அதிகமான வனத்துறை அலுவலர்கள் கும்கி யானைகள் தானியங்கி கேமிராக்கள் ஆள் இல்லாத டிரோன் கேமிராக்கள் என்று புலியை பிடிக்கும் களம் போர்க்களமானது.
ஒரு கட்டத்தில் கேரளா,கர்நாடகா மாநில வனத்துறையினருடன் கூட்டுவைத்து புலியை தேடினர் ஒவ்வொரு நாளும் புலி கிடைத்ததோ இல்லையோ ஊடகங்களுக்கு புலியை மயைமாக வைத்து செய்தித் தீனி கிடைத்தது.
முதல் பத்து நாள் புலி இருப்பதற்கான அடையாளமே வெளிப்படவில்லை பிறகு அங்கே இருக்கிறது இங்கே சுற்றுகிறது என்று வனத்துறையினரை புலியும் புலிபற்றிய தகவல்களும் சுற்ற விட்டது இருபதாவது நாள்தான் அந்தப் புலி கேமிராவில் சிக்கியது தொடர்ந்து அதன் பாதங்களை அடையாளமாக வைத்து தொடர்ந்ததில் இரண்டு நாள் காத்திருப்பிற்கு பின் புலியை மயக்க மருந்து செலுத்தியதன் காரணமாக பிடிபட்டது.
இத்தனைக்கும் முதல் முறை மயக்க மருந்த குண்டால் சுட்ட போதும் அதை சட்டை செய்யாமல் ஒடி ஒளிந்தது, பிறகு இரண்டாவது முறை சுட்ட பிறகுதான் சுருண்டு விழுந்தது,இருந்தும் புலியின் பூர்வீகம் காரணமாக மயக்கமடைந்து இருந்தாலும் பராவாயில்லை என்று அதன் வாய் கால்களை கட்டியபிறகே அதை கூண்டில் அடைத்தனர்.அதிகப்படியான மயக்க மருந்து காரணமாகவும் சரியான உணவு இல்லாததாலும் புலி சோர்வாக இருந்தது இதை சிகிச்சகை்காக எங்கு அனுப்பலாம் என்று எண்ணிய போது அருகில் உள்ள வனவிலங்கு மீட்பகம் உள்ள மைசூருக்கு அனுப்பிவிட்டனர் , இப்போது அங்கே போய் தெம்பாக உறுமிக் கொண்டு இருக்கிறது.எப்படியோ 21 நாள் கிலியை ஏற்படுத்திக் கொண்டிருந்த புலி பிடிபட்டதில் பலருக்கும் நிம்மதி.
-எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

Home வாசகர் கருத்து (1)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    நீதிமன்ற உத்தரவு படி உயிருடன் பிடித்ததற்கு ஒரு பெரிய கும்பிடு. வாழ்க நீதிமான்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement